பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பாஸ்கரத் தொண்டைமான்

8
கலை பயில் புலவன் கார்த்திகேயன்


சென்ற வருஷம் புண்ணிய நகரமாம் பூனாவிற்குச் சென்றிருந்தோம், நானும் சில நண்பர்களும். பூனா மராத்திய மக்கள் நிறைந்திருக்கின்ற பெரிய நகரம். தமிழ் மக்கள் ஆயிரத்து ஐந்நூறு குடும்பத்தினர் அங்கு தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பல உத்தியோகங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் தமிழ் வளர்க்கிறார்கள். இந்தக் கலைக் கழக அன்பர் சிலருடன் பூனாவில் பிரசித்தி பெற்ற பார்வதி மலையில் உள்ள கோயில்களைப் பார்க்கச் சென்றேன். மலை என்றால் அங்கு முருகன் இருக்க வேண்டுமே என்று எண்ணினேன். 'ஓ இருக்கிறானே என்றார்கள் உடன் வந்த அன்பர்கள். சரி, இந்தத் தொலை தூரத்தில் உள்ள ஊருக்கு வந்த போதும், நமது முருகன் நமக்கு முன்னே ஓடி வந்து மலை மீது ஏறிக் கொண்டு நிற்கின்றானே' என்று எண்ணிக் கொண்டே நிறைந்த மனத்தோடு மலைமேல் ஏறினேன். மலை பெரிய மலை இல்லை. திருத்தனி மலை உயரமே இருக்கும். ஆனால் அங்கு கட்டியிருப்பது போல அழகான படிக்கட்டுகளும் இல்லை, மண்டபங்களும் இல்லை. படிகள் விசாலமாக இருந்தன. பத்துப் படிக்கட்டுகளுக்கு ஒரு படிக்கட்டே அகலமாக இருந்தது. அந்தப் படிக்கட்டைக் கட்டிய மராத்திய மன்னர்கள் குதிரையின் மேல் ஏறிக்கொண்டே மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்வார்களாம்.

மலை ஏறியதும், நாங்கள் கண்ட முதற் கோயில் தேவ தேவன் கோயில்தான். ‘தேவர் கோன் அறியாத தேவதேவன்’ லிங்கத் திரு உருவிலே இருக்கிறான். யார் வேண்டுமானாலும் கோயிலுள் சென்று இறைவனைத் தொட்டு பூசை பண்ணலாம். கோயில், கோயில்