பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

47


கட்டுக்கோப்பு, கோயில் இருக்கின்ற நிலை, கோயிலில் இருக்கின்ற மூர்த்திகள் எல்லாம் உள்ளத்தைத் தொடவில்லை. அழகு அழகான கோயில்களையும் அற்புதம் அற்புதமான மூர்த்திகளையும் தமிழ்நாட்டில் பார்த்த கண்களுக்கு அங்குள்ளவை கோயில்களாகவும், மூர்த்திகளாகவும் தோன்றாதது வியப்பில்லை. தேவதேவன் கோயில் தவிர, பண்டரிபுரம் விட்டலுக்கு ஒரு சிறுகோயில் இருக்கிறது. பவானி அம்மனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவுக்கும் ஒரு கோயில் இருக்கிறது. இந்த மூர்த்திகளை எல்லாம் தரிசித்த பின் தேவதேவன் கோயிலுக்கு வலப்புறம் உள்ள ஒரு சிறு கோயிலுக்கும் போனோம். அதைத் தான் முருகன் கோயில் என்றார்கள், உடன் வந்த நண்பர்கள். அந்தக் கோயில் வாசலில் ஒரு பலகை தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் ஆங்கிலத்திலும் மராத்தியிலும் எழுதி இருந்தது, பெண்கள் இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று. இது என்ன? இந்தக் கோயிலுக்குள் மட்டும் பெண்கள் வருவதைத் தடை செய்வானேன் என்று உடன் வந்த நண்பர்களிடம் கேட்டேன். இங்குள்ள கார்த்திகேயன் பிரம்மச்சாரி, அவன் பெண்களையே பார்ப்பதில்லை என்று வைராக்கியமாக இருக்கிறான். அவன் உத்திரவுப்படியே தான் கோயில் நிர்வாகிகள் "பெண்களை உள்ளே அனுமதிக்காதீர்கள்" என்று உத்திரவு போட்டிருக்கிறார்கள்' என்றார்கள். எனக்கோ ஒரே ஆச்சர்யம். 'ஒன்றுக்கு இரண்டாக வள்ளியையும், தேவயானையையும் கட்டிக் கொண்ட நமது தமிழ்நாட்டு முருகனா இங்கு பிரம்மச்சாரி வேஷம் போடுகிறான்? அவன் வேஷத்தையும் தான் பார்ப்போமே என்று கோயிலுக்குள் போனோம். போனால் அங்கு முருகன் மயில் மீது ஆறுமுக மூர்த்தியாக ஆரோகணித்திருந்தான். பளிங்கில் அமைந்த திரு உருவம் தான். பெரிய உருவமும் அல்ல; நல்ல அழகோடு கூடிய உருவமும் அல்ல, அவனுக்குக் கார்த்திக் என்று பெயரிட்டிருக்கிறார்கள். கார்த்திகைப் பெண்கள் அறுவர் பயந்த ஆறமர் செல்வன் அல்லவா. ஆதலால் கார்த்திகேயன் என்று அழைப்பது பொருத்தம் தான். என்றாலும் இவன் ஏன் பெண்களையே பார்க்க மாட்டேன் என்று கடும் பிரம்மச்சாரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் அங்குள்ளவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் விடை கண்டுபிடித்தேன் நான். தமிழ்நாட்டுக் குறமகள், நம்பிராஜன் புத்திரி வள்ளியைக் கண்டு