இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆறுமுகமான பொருள்
53
என்று பாட உள்ளத்தில் வலிமை பெறுவது என்றால் அது எளிதில் சித்திக்கின்ற காரியமா என்ன? எத்தனையோ வருஷங்களாகப் ‘பாடும் பணியே பணி’ என வாழ்ந்து, அதனால் பெறற்கரிய அனுபூதி பெற்றதனால் உண்டான உரம் அல்லவா?
இப்படி எல்லாம் வழிபட்டோர் இன்னும் பலர் உண்டு. அவர் தம் அடிச்சுவட்டில் நடந்து சென்று முருகன் திருவடிகளில் விழுந்து வணங்கி, அருள் பெறும் அன்பர்கள் எல்லாம் பாக்கியசாலிகளே.