பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

9

என்பதல்ல. வருவதும் ஒன்றுண்டு. அது "கல்லாமற் போனேனே" எனக் கதறியழுது வருந்துவதே. அத்தகையோர் பாடிய பாடலும் ஒன்றுண்டு. அது,

அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும்
ஆடையும் ஆதரவாய்க்
கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக்
குறித்த தல்லால்
துள்ளித் திரிகின்ற காலத்திலே என்
துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய
பாதகனே.

என்பது.

"இளமையிற் கல்" என்பது ஒளவையின் வாக்கு. "இளமையிற் கல்லாமை குற்றம்" என்பது விளம்பி நாகனார் சட்டம். "இளமையிற் கல்வியை இழந்தவன், இழந்தவனே" என்பது நன்னெறியார் மொழி. கல்வியை இழந்தவன், கண்களையும் இழந்தவன். "கற்றவன் முகத்திலிருப்பதே கண்; மற்றது புண்" என்பது வள்ளுவன் கண்ட உண்மை. "கற்றவர் கருத்திலும் ஒரு கண் உண்டு" என்பது திருமூலர் கருத்து.

கல்வியிலும் மெய்க்கல்வி' என ஒன்றுண்டு எனவும் சமயங்கள் கூறும். இறைவனை, “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" எனவும், “கற்றவர் கருத்தினாற் காண்போன்" எனவும் அறிஞர்கள் கூறுவர். "இறைவனை வணங்காதவர் கற்றும் பயனடையாதவர்" என்பது திருக்குறள் நெறி.

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே"; "கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே; எக்குடிப் பிறப்பினும் யாவரேயாயினும்