பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

15

வில்லையானால் சிறிது பொறுத்திரு. தானாக யாவும் வெளி வந்துவிடும். இரண்டொரு மணித்துளிகளுக்குப் பிறகு அறியக் கூடியதை முன்னதாக அறியத் துடிதுடித்துப் பலரையும் கேட்டுக்கொண்டேயிராதே அது உன் தகுதியைக் குறைத்துக் காட்டிவிடும்.

பல்லாண்டுகளுக்கு முன்பு நான் பயணஞ் செய்து வந்த வண்டியில் பலர் பலவாறு பேசிக்கொண்டே வந்தார்கள். சிலர் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அவை ஒவ்வொன்றும் அவரவர் தகுதியைக் காட்டிக் கொண்டே இருந்தன. நான் மிகப் பொறுமையாக அவர்களின் அறிவுக்குப் புள்ளி போட்டுக் கொண்டேயிருந்தேன். ஏன் நீங்கள் கூட எளிதாகப் போடலாம் அவர்களின் கேள்விகளும் இவை தான்...

"வரியெல்லாம் இன்னமே இருக்காது இங்கிறாங்களே,

நிசமாங்க?"

"மணி அடிச்சாத்தான் வண்டி வருமுங்கிறாங்களே,

எப்படிங்கோ?"


இப்படி இவர்கள் கேளாதிருந்தால், அவர்களது அறிவிற்குப் புள்ளிபோட நம்மால் இயலுமா? அவர்களது கேள்விகள் தானே அவர்களது அறிவை நமக்குக் காட்டிக் கொடுத்தது. அந்த வண்டியிலேயே எதுவும் பேசாமல் பயணம் செய்து வந்தவர்கள் இருவர். வண்டி நின்றதும் அவர்களில் ஒருவரை அணுகி, "ஐயா, தாங்கள் எந்த ஊர்? என்ன வேலை? எங்குச் செல்லுகிறீர்கள்?" என அன்பாகக் கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து புன்சிரிப்பு மட்டுமே வெளி வந்தது. நான் அவரது அறிவுக்கு 100 புள்ளிகள் குறித்துக்கொண்டு மிகவும் மரியாதையுடன், "நீங்கள் தமிழகத்திற்கு ஒரு வழிகாட்டி, மிகவும் நன்றி" எனக்