பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

17

கேள்விகளுக்கு விடையளிப்பதில் வக்கீல்களும் டாக்டர்களும் மிகுந்த விழிப்பாக இருத்தல் வேண்டும். அவர்களுக்கு உண்மை தெளிவாகத் தெரிந்திருந்தாலும், அவற்றை வெளிப்படையாகக் கூறாமல் சிறிது சுற்றி வளைத்துக் கூறுவதே நலமாகவிருக்கும். "உயிர் போய் விடும்" எனக் கூறிய கேஸ்கள் பிழைத்துக் கொண்டதால் கெட்டுப்போன டாக்டர்களும், "தோற்றுப் போகும்" எனக் கூறிய கேஸ்கள் வெற்றிபெற்றதால் அழிந்து போன வழக்கறிஞர்களும் பலருண்டு.

கேள்வி கேட்டு அறிவதைவிட, கேளாமற் கேட்டு அறிவதைவிட, கேள்விக்கு விடை கூறுவதைவிட, எதையும் எவரிடமும் பேசாமலிருக்கப் பழகிக் கொள்வதே மிகவும் நல்லதாகும். ஏனெனில், குறைவாகப் பேசுகிறவர்களையே அறிவாளிகள் விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்றைய தினம் உ ய ர் ந் த அறிஞர்களாகவும், சிறந்த செயலாளர்களாகவும் உள்ள தலைவர்ளெல்லாம், குறைந்த பேச்சு உடையவர்களாகவே காணப்படுகிறார்கள்.

வாய்க்கு இரண்டைக் கதவுகள் இருப்பது ஏன் தெரியுமா? எப்போதும் முடி வைப்பதற்கு. காதுகளுக்குக் கதவு களே இல்லாமல் இருப்பது ஏன் தெரியுமா? எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதற்கு! வாய் ஒன்றும், காது இரண்டுமாக அமைந்திருப்பது ஏன் தெரியுமா? குறைவாகப் பேசு, அதிகமாகக் கேள் என்பதற்கு!

காதுக்கும் வாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாய் நல்லதைச் சொல்ல வேண்டுமானால், காது நல்லதைக் கேட்டிருக்கவேண்டும். வாய் வணக்கமாக இன்னுரைகளைக் கூற வேண்டுமானால், காது இணக்கமாக நல்லுரைகளைக் கேட்டிருக்க வேண்டும். அதிகம் கூறுவானேன், காதால்