பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 21

ஒருவரையொருவர் அடித்துத் துன்புறுத்துவது விலங்குக் குணம். தன்னலம் கொண்டு உயர்ந்து செல்வது பறவைக் குணம். தீமை செய்தவர்க்குத் தீமை செய்வது தேள், பர்ம்புக் குணம். தீமை செய்யாதவர்க்கும் தீமை செய் வது பேய்க்குணம். தீமை செய்தவனை மன்னித்து அதை மறந்து அவனுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பதே மனித குணம் இவற்றையெல்லாம் கடந்து தீமை செய்த வர்க்கும் நன்மை செய்வதே தெய்வ குணம் என்றாகும், இந்தக் குணமே அருட் செல்வம் எனப்பெறும்.

பொருட் செல்வம் பெறுவது அரிது. அருட் செல்வம் பெறுவது எளிது. பொருட்செல்வம் பெறப் பல ஆண்டுகள் வேண்டும். அருட்செல்வம் பெறச் சில வினாடிகளே போதும். பொருட்செல்வம் உழைத்துப் பெறுவது. அருட் செல்வம் நினைத்துப் பெறுவது, பொருட் செல்வம் கையால் எண்ணிப் பெறவேண்டிய ஒன்று. அருட் செல்வம் மனத் தால் எண்ணிப் பெறவேண்டிய ஒன்று. ஆகவே தம்பி! நீ அருட் செல்வத்தைப் பெற விரும்பு அதைப் பெற்று அருட்செல்வனாக விளங்க ஆசைப்படு மிக எளிதாகப் பெறக்கூடிய இவ்வுயர்ந்த செல்வத்தை நீ ஒருபோதும் இழந்துவிடாதே.

"என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதும், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதும், "எவ்வுயிரும் பராபரனின் சந்நிதியாகும்" எ ன்பது ம் நமது முன்னோர்களின் வாக்கு. ஆகவே பிறரை உன்னைப் போன்று நினை! அவர்களை வாழவைத்து வாழ்! அவர்கள் வாழ்வதற்காகவே வாழ்!

உன்னைப்போன்ற மக்களை உடன்பிறந்தவர்களாகக் கருது. ஜாதி கருதி, பிறப்பினால் உயர்வு தாழ்வுகளை

ஆ. --2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/23&oldid=956412" இலிருந்து மீள்விக்கப்பட்டது