பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ஆறு செல்வங்கள்

எண்ணி வெறுத்து ஒதுக்காதே! ஒதுக்கினால் நீ அருட் செல்வத்தை இழந்துவிடுவாய்.

மக்களாகப் பிறந்தவர்களில் வறுமையாளரே பெரும் பான்மையோர். அவர்களிற் பலர் நீ வாழும் நாட்டில், ஊரில், தெருவில், அருகில் இருப்பவர்கள் அவர்களை ஏழைகள் என்றெண்ணிக் குறைவாக மதித்து எள்ளி நகையாடாதே. அவர்களிலும் நீ உயர்ந்தவன் என எப்போதும் நினையாதே. நினைத்து விட்டால் அப்போதே உன்னை அருட்செல்வம் இழந்துவிடும்.

அறிவால், ஆற்றலால், உடலால், வலிமையால், பொருளால், பிறவற்றால் உன்னைவிட மெலிந்தவர்களைத் தாக்காதே! தாக்கும் நிலை வந்தால் உன்னைவிட வலிமை வாய்ந்தவர்கள் உன்னைத் தாக்க வருவதாக நினை. அப்போது உன் மனம் என்ன பாடுபடுமோ அதனையே அந்த ஏழ்மை மனமும் படும் என நினை. உடனே அருட் செல்வத்தைப் பெறுவாய். இன்றேல் அதை நீ இழந்து விடுவாய்!

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் விலகிப் போய் விடாதே! நெருங்கு அவர்கட்கு உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை எண்ணிப் பார் உடலாலோ, பொரு ளாலோ, சொல்லாலோ உதவிசெய்ய முடியுமானால் துணிந்து செய்! விரைந்து செய்! முடிந்தவரை செய்! உன்னால் முடியாதிருக்குமானால் அதற்காக வருந்தி ஒரு சொட்டுக் கண்ணிராவது விடு. உள்ளத்தில் அருட்செல்வம் பிறக்கும் முகத்தில் அருள் ஒளி வீசும்! நீ அருட்செல்வனாகத் திகழ்வாய்!

யாரோ, எவரோ ஒருவர் வண்டியில் அடிபட்டுக் கிடக்கிறார் என்று வழிநெடுகச் சொல்லிக் கொண்டு போகாதே! அடிபட்டுக் கிடப்பவரை உன் உறவினனாக உடன்பிறந்தவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/24&oldid=956415" இலிருந்து மீள்விக்கப்பட்டது