பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 28

னாக, அல்ல நீயே அடிபட்டுக் கிடப்பதாக எண்ணு! அப்போது உனக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது புலப்படும். அதை உடனே செய். நீ அவர்களை வருந்தித் தழுவு! அருட்செல்வம் உன்னை மகிழ்ந்து தழுவும்.

சொற்களில் தீச்சொல், சுடுசொல். கடுஞ்சொல், கொடுஞ்சொல் எனப் பலவகையுண்டு, அவைகளைச் சொல் வதற்காகத்தான் நாக்குப் படைக்கப் பெற்றிருக்கிறது என நினைத்துவிடாதே! அதனால் கடுமையும், கொடுமையும், தீமையும் விளையுமேயன்றி நன்மை விளைவதில்லை. இவ் வுண்மையை அச்சொற்களின் பெயர்களே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன! இத் தீச்சொற்களை எளியவரிடத் தும், வலியவரிடத்தும் சொல்லாதிருப்பது நல்லது. "இன் சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாது' என்பது நல்லறிஞர்களது வாக்கு. கடப்பாரைக்குப் பிளவுபடாத கருங்கற்பாறை பசுமரத்தின் வேருக்குப் பிளவுபட்டுவிடும் என்பது நாம் கண்டுவரும் உண்மை, வெற்றி தீச்சொல்லில் இல்லை; தீஞ்சொல்லில் உள்ளது. தீச்சொல் அருட் செல்வத்தை அழிக்கும்; தீஞ்சொல் அருட் செல்வத்தை அளிக்கும்.

வேட்டையாடுதல் சிலருக்குப் பொழுது போக்கு. ஆனால் விலங்குகளுக்கோ அது உயிர்ப்போக்கு. சிலர் இதை வீரம் என்பர். துப்பாக்கி கொண்டு, அதுவும் தூரத்தில் மறைந்து நின்று சுடுகிறவர்களைக் கண்டால் வீரம் தொலை தூரத்தில் போய் நின்று நகைக்கும். சில சமயம் எதிரில் வந்தும் பழிக்கும். மடியில் பால்சுரக்க மனத்தில் குட்டியை நினைத்து ஓடுகின்ற மானைச் சுட்டு வீழ்த்த எண்ணும் மனம் நன்மனமல்ல. அது கல்மனம். உள்ளத்திலே குஞ்சை நினைந்து வாயிலே இரையைக் கல்வி விண்ணிலே பறந்து செல்லும் பறவைகளின் இறகிலே சுட்டு வீழ்த்தப் பார்ப்பவன் கண்களும் கண்களல்ல; அவை புண்கள். அருள் ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/25&oldid=956417" இலிருந்து மீள்விக்கப்பட்டது