பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- 84 ஆறு செல்வங்கள்

அற்ற கண் கண்ணல்ல; அது புண் எனப்பெறும். நீ இத்

தவறைச் செய்து உன் கண்களைப் புண்களாக்கிக் கொள் ளாதே! உன் உயிர் போன்று பிற உயிரையும் நினை! உன் கண்களில் அருள் ஒளி வீசும்!

"ஊனைத் தின்று ஊனை பெருக்காமை முன்னிதே' என்பது இனிது நாற்பதில் ஒர் அடி.

தன்னுாள் பெருக்கற்குத் தான் பிறிநூண் உண்பான் எங்ங்ணம் ஆளும் அருள்

என்பது திருக்குறளில் ஒரு குறள். உன் சதை பொருகு வதற்காகப் பிற உயிர்களின் சதையைத் தின்பது நல்லதல்ல என்பது கருத்து. ஆட்டின் குடலை, கோழியின் தொடையை, மீனின் தலையைத் தன் முன்னே வைத்து உண்ண வாயைத் திறப்பவன் உள்ளத்தை எப்படி ஆளும் அருள்? ஆளாது. அப்படியே மாளும் அது.

மக்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் மட்டுமல்ல, செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பது மெய்ப்பிக்கப் பெற்றுவிட்டது. வருந்திய முல்லைக் கொடி வாடாமல் படர்வதற்கு ஊர்ந்து சென்ற தேரையே கொடுத்து உளமகிழ்ந்தவன் பாரி. 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்பது அருட்சோதித் தெய்வத்தை ஆண்டுகொண்ட தெய்வமாகக் கொண்ட அருட்பிரகாச வள்ளலின் வாக்கு, பயிரைக் கண்டு வாடிப் பழகிவிட்ட உள்ளம், உயிரைக் கண்டு வர்டி உயிர் கொடுக் கவும் முந்தும். ஆம் வாடிப் பெறுஞ் செல்வமே வளரும் அருஞ் செல்வமாகும்.

இறைவன் "அருள் ஒளியினன். அருள் வடிவினன்.' அவன் அருளே கண்ணாகக் கொண்டு கண்டு, 'அனருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/26&oldid=956419" இலிருந்து மீள்விக்கப்பட்டது