பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 29

ஒரு பங்குக்கு நிலமும், 1 பங்குக்கு ஆலைப் பங்குகளும் நல்லவைகளாகப் பார்த்து வாங்கி வைப்பதுடன், மீதியுள்ள ஒரு பங்குப் பணத்தில் அரைப் பங்கு ரொக்கமாகவும்: அரைப் பங்கு தங்கமாகவும் வைத்திருந்து பாதுகாப்பதே சிறந்த கலையாகும். வாங்கிய தொகை 25 ஆயிரமாக இருந்தால், இது 10, 5, 5, 2, 2} எனப் பிரியும்.

வியாபாரியாகவோ, தொழில் துறையினராகவோ இருந் தால், அவர் தம்மிடம் உள்ள தொகையை 10 பங்குகளாகப் பிரித்து, 5 பங்கை தொழிலிலும், இரண்டுபங்கை வீடுகளிலும், ஒரு பங்கை நிலத்திலும், ஒரு பங்கைப் பாங்குகளிலும், அரைப் பங்கைத் தங்கத்திலும் போட்டு, அரைப்பங்கை ரொக்க மாகவும் வைத்திருக்க வேண்டும். அவருடைய மூலதனம் 100 ஆயிரமாக இருந்தால் அது 50,20, 10,10, 5, 5, எனப் பிரியும். கம்பெனியின் பங்குள்ள எல்லாவற்றையும் ஒரு துறையிலேயே வாங்கிவிடாமல், பாங்க், நூல், சர்க்கரை, துணி, தோட்டம், இயந்திரம் ஆகிய பலதுறைப் பங்கு களாகவும் பார்த்து வாங்கி வைப்பது நலமாகும். இம்முறை யானது வஞ்சக மக்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்லாமல்; ஒரு திடமான கொள்கையில்லாத மக்களால் ஆட்சி செய்யப் பெறுகிற அரசாங்கத்தின் போக்கு களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவும். ஒரு துறை தாழ்த்தி விட்டாலும், மற்றொரு துறை உயர்த்திவிடும். எந்த முறையிற் பார்த்தாலும் இதைவிடச் சிறந்த பாதுகாப்புக் கலை இப்போது இல்லை.

திடீரென வருமானம் குறைந்துவிட்டால் அல்லது தடைப்பட்டுவிட்டால் எவரும் வருத்தப்பட வேண்டிய தில்லை. வருந்தியும் பயன் இல்லை. அவர்கள் உடனே செய்யவேண்டியது செலவினத்தைக் குறைத்துக் கொள்வது தான். ஒரு குளத்திற்குத் தண்ணீர் வரும் வழி அடைப்பட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/31&oldid=956431" இலிருந்து மீள்விக்கப்பட்டது