பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் §

பொருளாதாரக் கொள்கைகளைப் பித்தலாட்டக் கொள்கைகள் எனச் சிலர் கூறுவதுண்டு. அது தவறு. அவ்வாறு குறை கூறப்படுவதற்குரிய காரணங்கள் இரண்டு. ஒன்று பொது மக்களுக்கு இன்னதென்றே விளங்காதது. மற்றொன்று பொருளாதாரப் பேரறிஞர்களிடமிருந்தே மாறு பட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருப்பது.

பழங்காலத்து மக்களுக்குப் பணம் தேவையில்லா திருந்தது. அவர்கள் தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்துத் தேவைப்படும் பொருள்களை வாங்கிவந்தனர். இதற்குப் பண்டமாற்று முறை எனப் பெயர். காலப்போக்கில் நம்மிடம் உள்ள பொருள்களைத் தேவைப் படாத பொருள் களுக்கும் விற்கவேண்டி வந்ததால், பொருள்களின் அளவு கருவியாக எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு பொருள் நிற்க வேண்டி வந்தது. முதலில் நின்றது. நெல்; அடுத்து நின்றவை ஆடு மாடுகள்; பின் இரும்பு செம்பு முதலியவை; இறுதியாகப் பொருட் செல்வத்தின் அளவு கருவியாக நின்றவை பொன்னும் வெள்ளியும். இப்போது அதுவும் மாறிக் கலப்பட உலோகமும் காகிதமுமே அளவு கருவியாக நிற்கின்றன.

ஈயப்பணமும், காகிதப் பணமும் வெளிமதிப்பு உள்ளவையே. அவற்றின் உள்மதிப்பு மிகக்குறைவு. அவை தன் மதிப்பினால் செல்லுபடியாவதில்லை. அரசாங்க முத்திரையினரில் செல்லுபடியாகிக் கொண்டிருக்கின்றன! இப்போது தன் மதிப்பினால் செல்லுபடியாகிக் கொண் டிருக்கும் ஒரே நாணயம் ஒற்றைக் காசுதான். அதன் உள்மதிப்பும் வெளிமதிப்பும் ஒன்றே. முன் வெள்ளியிலும் தங்கத்திலும் அச்சிடப்பெற்ற நாணயங்களின் உள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/33&oldid=956437" இலிருந்து மீள்விக்கப்பட்டது