பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32. ஆறு செல்வங்கள்

மதிப்பும் வெளி மதிப்பும் ஒன்றாகவே இருந்தன. காகிதப் பணம் அப்படியல்ல. அது பெருகப் பெருக அதன் மதிப்புக் குறையும். மதிப்புக் குறையக் குறைய ஒரு பொருளுக்கு அதிகக் காகிதப் பணம் கொடுக்கவேண்டி வரும். அதைக் காண்பவர் பொருள்களின் விலை ஏறி விட்டதாகக் கூறுவர். இது தவறான கருத்து.

உண்மை என்னவெனில் 1931 முதல் இன்றுவரை கடந்த 80 ஆண்டுகளாக எந்தப் பொருளும் விலை ஏறவில்லை என்பதே. அன்றைக்கும் பவுனுக்கு 3 மூட்டை நெல். இன்றைக்கும் பவுனுக்கு 3 முட்டை நெல். பவுன் 15 ரூபாயாக இருந்தபோது நெல் மூட்டை 5 ரூபாயாக இருந்தது. பின் பவுன் 30 ரூபாய் ஆனபோது நெல் ரூபா 10. பவுன் 45 ரூபா ஆனதும் நெல் ரூபாய் 15. பவுன் 60 ரூபாய் ஆனதும் நெல் ரூபாய் 20இப்போது பவுன் 90ஆனதும் நெல்ரூபா 30 பவுனுக்கு மூன்று மூட்டை நெல் அன்றும் விற்றது. இன்றும் விற்கிறது; இனியும் விற்கும்.

ஒர் ஏக்கர் நிலம் உள்ள உழவன் தன் நிலத்தில் 80 மூட்டை நெல் விளைவித்து 15 மூட்டையைத் தன் செல விற்கு வைத்துக்கொண்டு, மீதி 15 மூட்டை நெல்லை விற்று எல்லாப் பொருள்களையும் அன்றும் வாங்கினான், இன்றும் வாங்குகிறான். எது விலை ஏறியது? நெல்லையோ தங்கத்தையோ இணைத்துப் பார்க்கும்போது எப்பொரு ளும் விலை ஏறியதாகத் தெரியாது. காகிதப் பணத்துடன் இணைக்கும் போதுதான் எல்லாப் பொருளும் விலை ஏறிய தாகத் தோன்றும். இது பொய்த் தோற்றம்.உண்மை என்னவெனில் காகிதப் பணத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்பதே. அன்று நமது நாட்டில் 150 கோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/34&oldid=956439" இலிருந்து மீள்விக்கப்பட்டது