பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 ஆறு ೧೮ನೇಮಿಸಿಹ6

"செல்வம்' என்பதுகூட அப்படியே. ஐந்து ஆயிரம் சொத்து உள்ள ஒருவன் 500 ரூபாய் சொத்துள்ளவனுக்குப் பணக்காரனே. ஆனால், இவன் 5 ஆயிரம் சொத்துள்ளவ னுக்கு ஏழைதானே! அவனும் 5 லட்சம் சொத்துள்ளவனுக்கு ஏழைதானே! இவர்களில் யார் செல்வர் என்று எப்படிக் கூறுவது?

திருக்குறளில் 40-ம் அதிகாரத்தில் கல்விச் செல்வத்தை வற்புறுத்திக் கூறிய வள்ளுவர் 42-ல் கேள்விச் செல்வத்தை மிக உயர்த்திக் கூறி, பின்னரே 48-ல் அறிவுச் செல்வத்தை விளக்கிக் காட்டுகிறார். இதிலிருந்து அறிவுச் செல்வம் கல்விச் செல்வத்திலும், கேள்விச் செல்வத்திலும் மிகமிக உயர்ந்த செல்வம் என்றாகிறது.

- தம்பி! நீ அறிவுடையவனாக இருக்க விரும்புகிறாயா? அப்படியானால் அறிவுச் செல்வத்தைப் பெறு! பெரியோரை வணங்கு எளியோர்க்கு உதவு! பொருளைப் போற்று! உடலை ஒம்பு நன்றாகப் படி அதிகமாகக் கேள்! பொறுமை யாகச் சிந்தி குறைவாகப் பேசு! ஒழுக்கமாக நட!

ஆம். நட! வெற்றி பெறுவாய்! அப்பொழுதுதான் நீயும் அறிவுச்செல்வம் பெற்ற நன்மகனாய்த் திகழ்வாய்! உன்னைப் போன்ற அறிவுச் செல்வங்களை நிறையப் பெற்றால் தான் பெற்ற நாடும் வளர்த்த மொழியும் சிறப்படையும்!

வாழட்டும் தமிழகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/42&oldid=956458" இலிருந்து மீள்விக்கப்பட்டது