பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. மக்கட் செல்வம்

"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள்' என்று நம் பெரியோர்கள் வாழ்த்துவது உண்டு. அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவதல்ல. வாழ்வு பெரு வாழ்வாக ஒளிவீசுவதற்குப் பெறவேண்டிய பேறுகள் பதினாறு என்பதே அதன் பொருள். இவை மனை, மனைவி, மக்கள், தாய், நீர், நிலம், கால்நடைகள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, ஏவல், பொன், மணி, புகழ் எனப் பதினாறாம். -

இவற்றுள் ஒவ்வொன்றும் சிறந்த செல்வமே. எனினும் மக்கட் செல்வமே தலைசிறந்த செல்வமாகும் என்பது ஒரு புலவர் பெருமகனது கருத்து. இதனை,

பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனும் மற் றென்னுடையரேனும் உடையரோ-இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்

என்ற கவிதை மெய்ப்பிக்கும்.

கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த அறிவுடைநம்பி இன்னும் ஒருபடி தாண்டி இக்கருத்தை வலியுறுத்துகிறார். படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறு குறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியும் துழந்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/43&oldid=956461" இலிருந்து மீள்விக்கப்பட்டது