பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ஆறு செல்வங்கள்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்ந்து மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை யில்லை தாம் வாழும் நாளே என்பதே.

"மக்கட்பேறு' என்பது திருக்குறளில் ஏழாவது அதிகா|ரமாகும். 'மக்கள்' என்பது ஆண், பெண் இரண்டையும் குறிக்கும். குறளுக்கு உரை கண்ட பரிமே லழகர், 'புதல்வரைப் பெறுதல்' என இதற்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். புதல்வர் என்பது பெண் மக்களைக் குறிக்காது நீங்கிவிடும். இது ஒரு மாறுபட்ட கொள்கை என்பது அறிஞர் பெருமக்களின் கருத்து. உண்மையில். வள்ளுவரது கொள்கை ஆண் பெண் ஆகிய இருவகைக் குழந்தைகளையும் ஒப்பாகக் கருதுவதேயாம். அதற்கு

ஏற்றது "மக்கட் பேறு' என்பதே. இவ்வுண்மையை இத்தலைப்பில் வருகிற கு றள்களில், "மக்கள்' என எட்டுக் குறள்களில் காணப்படுவதாலும், "புதல்வர்'

என எந்தக் குறளிலும் காணப்படாமையாலும் நன்கு அறியலாம்.

பிள்ளைத்தாய்ச்சியராயிருக்கும் பெண்கள் அன்பு உள்ளங்கொண்டு அமைதியான வாழ்வு வாழ்ந்தாக வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைப்பேறு எளிதாகவும் மகிழ்வாகவும் இருக்கும். வீரமுள்ள குழந்தைகளைப் பெறு வதற்காகப் பிள்ளைத்தாய்ச்சிகளுக்கு வீரர்களின் வரலாற்றைக் கூறுவதும் உண்டு. கருவுற்ற பெண்ணின் உடல்நலம் மனநலம் அனைத்தும் குழந்தையையும் சென்றடையும் என்பது முற்றிலும் உண்மை.

மேல் நாட்டு மருத்துவமுறை வளர்ச்சியும், புதிய நாகரிக வளர்ச்சியும், தாய் சேய் நல விடுதிகளின் வளர்ச்சி யும் அதிகமாக ஏற்பட்டுள்ள காலம் இக் காலம். எனினும், இக் காலத்திலேற்படுகின்ற பிள்ளை தாய் இழப்புகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/44&oldid=956463" இலிருந்து மீள்விக்கப்பட்டது