பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விஸ்வநாதம் 45

4. பலாச்சுளை-நாவுக்கு, கண்ணுக்கு, மூக்குக்கு இனிமை

தரும்.

காதுக்கு? உடம்புக்கு?

5

கிளி-கண்ணுக்கு, காதுக்கு, உடம்புக்கு இனிமை தரும்.

நர்வுக்கு? மூக்குக்கு?

என்ன செய்வது? முயன்றோம் நம்மால் முடியவில்லை. மேலை நாட்டினரும்கூட, ஐம்புலன்களுக்கும் இனிமை தரும் ஒரு பொருளைக் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், அத்தகைய ஒரு பொருளை இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னேயே வள்ளுவர் கண்டுபிடித்துக் கூறியிருக் கிறார். அது,

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்பதே.

வள்ளுவர் ஆணாக இருந்ததால் இவ்வாறு கூறியுள்ளார். பெண்ணாக இருந்திருந்தால்,

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்ந்து உற்றறியும் ஐம்புலனும் திண்டோளான் கண்ணே உள.

என்று கூறியிருப்பார். இதிலிருந்து மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் இனிமைதரும் பொருள் இவ்வுலகில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணுமே என்று தெரிகிறது.

வள்ளுவர் அத்தகைய ஆணையும் பெண்ணையும் சேர்ந்துவைத்து அவர்களுடைய ஐம்புலனுக்கும் இன்பம் பயக்க வேறொரு பொருளும் உண்டு என்று சுட்டிக்காட்டுவது நமக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது. அப்பொருள்தான் |மக்கட் செல்வம்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/47&oldid=956469" இலிருந்து மீள்விக்கப்பட்டது