பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ஆறு செல்வங்கள்

உச்சி முகர்தல்-மூக்குக்கு இன்பம் ஈன்ற ஞான்று-கண்ணுக்கு இன்பம் அவர் சிறுகை அளாவியகூழ்-வாய்க்கு இன்பம் மக்கள் மெய் திண்டல்-உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல்-இன்பம் செவிக்கு

எப்படி வள்ளுவர்? எப்படி அவர் காட்டிய மக்கட் செல்வம்?

தவறு செய்யும் குழந்தைகளை அடித்து வளர்ப்பது நல்லது என்பது சிலரது சருத்து. அதன் மனம் போன படியே போகவிட்டு வளர்ப்பது நல்லது என்பது சிலரது கருத்து, 'அச்சுறுத்தி மிரட்டி வளர்ப்பது நல்லது என்பது இன்னும் சிலரது கருத்து. நல்ல கட்டுப்பாட்டிலும், ஒழுங்கு முறையிலும் வளர்ப்பது நல்லது என்பது வேறு சிலரது கருத்து. நல்ல பிள்ளை, நல்ல பிள்ளை என ஊக்கி வளர்ப்பது நல்லது என்பது பலரது கருத்து எதற்கும் ஒர் அளவு இருக்கவேண்டும்' என்பது எனது கருத்து!

சிறு குழந்தைகளுடைய மனம், படம் எடுக்கப் பயன் படுத்தும் சாம்பல் வண்ணமுள்ள கண்ணாடியைப் போன்றது. எது தன் எதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னுள் பதித்துக்கொள்ளும் தன்மை வாய்ந்தது மோர்க் காரி மோர் விற்பதைக் கண்டால் தானும் தன் தலையில் ஒரு கொட்டங்கச்சியை வைத்துக்கொண்டு மோர், மோர் எனக் கூறி வரும். குதிரை ஏறிச் செல்வோரைக் கண்டால் தானும் ஒரு குட்டிச் சுவரின் மீது ஏறி ஆடி ஆடி குதிரையை ஒட்டுவ தாக மகிழும். உண்பதைக் கண்டால் உண்ணும், உடுத்துவதைக் கண்டால் உடுத்தும். ஆடுவதைக் கண்டு ஆடும், பாடுவதைக் கண்டு பாடும். வாழ்த்துவதைக் கண்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/48&oldid=956471" இலிருந்து மீள்விக்கப்பட்டது