பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விஸ்வநாதம் 47

வாழ்த்தும், வைவதைக் கண்டால் வையும். ஏனெனில் அது ஆராய்ந்து கொண்டிருக்கும் தன் கண்களால் அகப்பட்டதைப் பதிப்பித்துக் கொள்ளும் உள்ளம் படைத்தது. அதன் உள்ளத்தைப் படப்பதிவுக் கண்ணாடி (Photo plate) என்றால், அதன் கண்களைப் படப்பிடிப்புக் கண்ணாடி (Phoeo lens) எனக் கூறலாம். ஆகவே மக்கட் செல்வத்தை வளர்ப்பதில் மிக்க விழிப்பாக இருத்தல் வேண்டும்.

தம்பித்துரை உபதேசியார் என்பவர் எனது கிறித்தவ நண்பர். அவர் உண்ணும்பேர்தும், உறங்கும் போதும், விழிக்கும் போதும், பள்ளிக்குச் செல்லும் போதும், ஊருக்குப் போகும் போதும் இறைவனை வணங்குவது உண்டு. அவ்வாறு வணங்கும்போது, தன் பிள்ளைகளையெல்லாம் அருகில் அழைத்து வைத்துக்கொண்டு "ஜபம் செய்வோமாக!' என்று கூறியே இறைவனை வேண்டத் தொடங்குவார். ஒருநாள் தன் ஐந்து வயதுக் குழந்தையைக்கூப்பிட்டு "பிரம்பை எடுத்துவா ? என்றார். கொண்டு வந்து கொடுத்தது. அவர் அக் குழந் தையை நோக்கி, "இருமுறை சொல்லியும் கேளாததால் இப்போது நான் உன்னை அடிக்கப் போகிறேன்' என்றார். அதற்கு அந்தக் குழந்தை, 'அப்படியானால் ஜபம் செய்வோ மாக!' என்றது. உடனே உபதேசியார் பிரம்பை நழுவவிட்டுக் குழந்தையை நெஞ்சில் அணைத்துக் கொண்டு கண்ணிர் உகுந்தார். அக்காட்சியைக் இன்றும் என்னால் மறக்க முடிய வில்லை.

அவர் பொடி போடுவது உண்டு. ஆனால் குழந்தைகள் அறியும்படி போடுவதில்லை. அவருக்கு மனைவியின் மீது சிறிது கோபம் வரும். அப்போது அவர் 'பிள்ளைகளே! நீங்கள் வெளியே போகலாம்' என்பார். போய்விடுவார்கள்! மனைவியை அருகில் அழைத்து, 'நீ மனுசியா' என்று வைவார். பிறகு, "பிள்ளைகளே உள்ளே வரலாம்" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/49&oldid=956473" இலிருந்து மீள்விக்கப்பட்டது