பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 5 s

போர்க்களம் புகுந்து யானைகளைக் குத்தி வீத்திக் களிப்புடன் திரும்புதல் காளையின் கடமை.

என்று கூறியிருப்பதால் இவ்வுண்மையை அறியலாம்.

பழந்தமிழர்கள் தம் மக்களின் உடல், அழகு, அறிவு, ஆற்றல், வீரம் ஆகியவற்றை வளர்ப்பதைவிட அவர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதையே முதற்கடமையாகக் கொண் டிருந்தார்கள், அதனை,

ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ஒழுக்கம் விழுப்பம் தரும் இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பனவற்றால் நன்கு அறியலாம்.

தமிழகத்தில் தமிழாசிரியர்களால் நடத்தப்படும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில், தமிழ் இலக்கியங்களில், இருக்கும் தமிழ்ப் பண்பாடுகளைத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறுவ துண்டு. அவை,

(1) இந்திரர் அமிர்தம் கொடுப்பதாயினும், அது மிகச் சுவையாக இருக்கிறது என்று தமிழர் தனித்து உண்பதில்லை. பழியோடு இவ்வுலகமே வருவதானாலும் கொள்வதில்லை. புகழ் எனில் உயிரும் கொடுப்பர்.

(2) பெற்ற தாய் பசித்திருக்கப் பார்ப்பது, பிறந்த மகனுக்குப் பெரிய இழிவு. இருப்பினும் சான்றோர்களால் பழிக்கப்பட்ட செயல்களைச் செய்து தாயின் பசியைப் போக்க நினைப்பதில்லை

(3) உயிரை இழப்பதா? மானத்தை இழப்பதா? என்ற ஒரு நிலை வந்தால், உயிரை இழந்தேனும் மானத்தைக் காப்பாற்றுவர். ஏனெனில் அவர் உடல் நிலையாமையை யும் மானத்தின் நிலையுடைமையையும் அறிவர் என்பனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/53&oldid=956481" இலிருந்து மீள்விக்கப்பட்டது