பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1.கல்விச் செல்வம்

செல்வம் பலவகை. அவற்றுள் கல்வி ஒருவகை. இதனை "ஈடு இலாச் செல்வம்" என்றவர் திரு. வி. க. "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு. "கேடு இல்லாத சிறந்த செல்வம்" என்பது இதன் பொருள். பிற செல்வங்கள் கேட்டையும் விளைவிக்கும் என்பது கருத்து.

பிற செல்வங்கள் நீராலும் நெருப்பாலும் அழியக் கூடியன. ஆனால், கல்விச் செல்வமோ வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, கொள்ளையிட முடியாது, கொடுத்தாலும் குறையாது. இவ்வுலகிலுள்ள செல்வங்களில் பங்காளிகளால் பங்கிட்டுக் கொள்ள முடியாத ஒரே செல்வம் இக் கல்விச் செல்வமாகும்.

ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிற நாடுகளில் அவ்வளவு சிறப்பு இராது. ஆனால், கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. இதிலிருந்து தெரிவது என்னவெனில், “ஒரு மன்னனிடத்திலுள்ள செல்வங்களனைத்திலும் கற்றவனிடத்திலுள்ள கல்விச் செல்வம் ஒன்றே உயர்ந்து காணப்படும்' என்பதே.

பிற செல்வங்கள் ஒருவனிடம் சேர்ந்தால், அவனிடம் நிலைத்து நில்லாமல் அவனை விட்டு விலகி ஓடிப்போய் விடும். கல்விச் செல்வம் ஒருவனை அடைந்துவிட்டால்

ஆ. செ. -1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/7&oldid=1110850" இலிருந்து மீள்விக்கப்பட்டது