பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஆறு செல்வங்கள்

வாழ்விலும் தாழ்விலும் மட்டுமல்லாமல், சாவிலும் உடனிருந்தே அழியும். எப்படி இச் செல்வம்?

பொருட் செல்வம் அனைத்தையும் அதை உடையவனே வழி நடத்துவான் கல்விச் செல்வம் ஒன்று மட்டுமே தன்னை உடையவனை வழி நடத்தும். எப்படி இதன் வலிமை?

கல்விச் செல்வம் பெற்ற குடும்பத்திற் பிறந்த பிள்ளைகளுக்குச் சில தலைமுறை வரையிலாவது அந்த மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். பிற செல்வங்களைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அச் செல்வம் அடுத்த தலை முறை வரையிலாவது நிலைத்திருக்கும் என்பது பத்தில் ஒன்பது பங்குக்கும் உறுதியில்லை.

பிற செல்வங்களைத் தேடிப் பயன்பெற்று மகிழ்ச்சியுற வேண்டுமானால் அவன் கல்விச் செல்வத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல் எச்செல்வத்தைப் பெற்றிருப்பினும் அவன் அதனாற் பயன் பெறான் என்பது மட்டுமல்ல, சில பொமுது துன்பத்தையும் அடைய நேரிட்டு விடும்.

கல்லாத மக்களும் களர்நிலமும் வேறல்ல. இரண்டும் ஒன்றே. இவைகளைப் பேணுவார் எவருமில்லை. இவைகளால் பயனும் எவருக்கும் இல்லை. ஆதலால் இவை இருப்பதும், அழிவதும் ஒன்று போன்றதே.

செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது காணக் கூடிய காட்சியே. ஆனால் கற்றவர் முன்னே கல்லாதான் நிற்பது காணச் சகியாத காட்சியாகும்.

மாடுகளின் முன்னே மக்களை வைத்து ஒப்பு நோக்குதலும் உண்டு. எப்போது? உழைக்கும்போது. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/8&oldid=1110851" இலிருந்து மீள்விக்கப்பட்டது