பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவரங்கம் 98

செய்ய ஆசைப் பட்டார் அவ் ஆழ்வார். இந்திரன் நாட்டுச் செல்வமும் செந்தமிழ் இன்பத்துக்கு நிகரில்லை யாதலால் உம்பர் நாட்டுச் செல்வம் வேண்டேன் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

“பச்சைமா மலைபோல் மேனி

பவள்வாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போப்

இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகரு ளானே”

என்ற திருவாக்கு பொன்போல் போற்றத்தக்கதாகும்.