பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

403 ஆற்றங்கரையினிலே

கோயில் தமிழ் நாட்டின் ஒரு நல்ல அணியாகத் திகழ்கின்றது. இராசராசன் பெயர் தாங்கி நிற்கும் அப் பெருங்கோயிலை அந்நாளிற் பாடினார் கருவூர்த் தேவர் என்னும் பெரியார்:

சோழ மன்னரின் செல்வச் செழுமைக்கும் சமயப் பற்றுக்கும் ஒரு சான்றாய்த் திகழ்கின்றது. தஞ்சைப் பெருங்கோயில். அதன் உயர்ந்த நடுவிமானத்தின் உச்சியிலே குன்று போன்ற கருங்கல்லொன்று நின்று நிலவுகின்றது. அக் கல்லைக் கோபுரத்தின் உச்சியிற் கொண்டு சேர்ப்பதற்கு நெடுந் தொலைவிலிருந்து சாரம் அமைத்ததாகவும், தஞ்சைக்கு நான்கு மைலுக்கு அப்பாலுள்ள சாரப்பள்ளம் என்ற சிற்றுரரின் பெயரே அதற்குச் சான்று பகர்வதாகவும் அறிந்தோர் கூறுவர். இன்னும் அத் திருக்கோயிலின் முன்னே பெரிய நந்தி என்னும் மாக்களையும் ஒரே கல்லில் எடுப்பாக வடிக்கப்பட்டிருக்கின்றது. சுருங்கச் சொல்லின் தஞ்சைக் கற்கோயில் முற்காலச் சிற்பக் கலையின் சீர்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அக்கோயிலின் சுற்றாலையில் அமைந்துள்ள முருகன் திருவுருவைக் கண்டு ஆனந்தமுற்றார் அருணகிரியார்.

“ தஞ்சென வாம்.அடி யவர்வாழத்

தஞ்சையில் மேவிய பெருமாளே”

என்று பாமாலை சூட்டிப் பணிந்தார்.

சிவ நெறியிலே சிறந்த ஆர்வமுடைய இராசராசன் சிவபாத சேகரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். அம் மன்னனைப் பற்றிய பாட்டும் கூத்தும் முன்னாளிற். பல உண்டு. இராச ராசேச்சர நாடகம்’ என்னும் கூத்து தஞ்சைத் திருவிழாக் காலங்களில் சிறப்பாக நடைபெற்ற தென்பது பெரிய கோயில் கல்லெழுத்தால் புலனாகின்றது. அந்நாடகம் கிடைத்தால் சிவபாத சேகரன் பெருமை இன்னும் நன்றாக விளங்கும்.