பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை மாநகரம் is4

பெருஞ் சோழ மன்னர் காலத்திற்குப் பின் நாயக்க மன்னர் சில காலம், மராட்டிய மன்னர் சில காலம் தஞ்சை மாநகரில் ஆட்சி புரிந்தனர். அன்னார் கட்டிய கோட்டை களும் மாளிகைகளும் இன்றும் அந்நகரில் பொலிவிழந்து நிற்கக் காணலாம். அவற்றில் ஒன்று சங்கீத மண்டபம் என்று வழங்கும் இசை மன்றம். நெடுங் காலமாக ஒளி மழுங்கிக் கிடந்த அம்மன்றம் இப்பொழுது கலையரங்க மாக மீண்டும் காட்சியளிக்கிறது.

வீர சிவாஜியின் மரபில் வந்த மராட்டிய வேந்தர் பலர் தஞ்சையில் அரசு புரிந்தாரேனும் சரபோஜி மன்னன் ஒருவனே இன்றும் பொதுமக்களால் நினைந்து போற்றப் படுகின்றான். அரசாட்சியில் அவன் கருத்து செல்லவில்லை. ஆதலால் ஆங்கிலேயரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்புவித்தான். அவர் தந்த பொன்னையும் பொருளையும் கொண்டு கவலையின்றி வாழ்ந்தான்; அருங்கலைவாணரை ஆதரித்தான். பாட்டின் தரம் அறிந்து பரிசளித்தான். அவன் மீது ஒரு குறவஞ்சி நாடகம் பாடினார் ஒரு கவிஞர் அம் மன்னன் தஞ்சை மாநகரில் பவனி வந்த கோலத்தையும் அவன் அழகைக் கண்டு மையல் கொண்ட மதனவல்லியின் மோகத்தையும் அக் குறவஞ்சி நாடகத்திலே காண்பது ஒர் இன்பம். . -

காதலுற்ற மதனவல்லியின் முன்னே குறி சொல்லும் குறவஞ்சி கூடையும் கையுமாய்த் தோன்றுகிறாள். அவள் தப்பாமல் குறி சொல்லி எப்பாலும் புகழ் பெற்றவள்; பல நாட்டுப் பாவையரின் கைபார்த்துப் பரிசு பெற்றவள். இத்தகைய குறவஞ்சி மதனவல்லியை மகிழ்ந்து நோக்கி,

“சொன்ன குறிகளும் பெற்ற வரிசையும்

சொல்லுகிறேனடி கண்னே” என்று எடுத்துத் தான் பார்த்த பெண்களையும் பெற்ற பரிசுகளையும் அடுக்குவாளாயினாள். அம்மே ! நான்