பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 - ஆற்றங்கரையினிலே

ஆந்திர நாட்டிலே ஒரு பெண்ணின் கைபார்த்துக் குறி சொன்னேன். அவள் மனமகிழ்ந்து இந்த மூக்குத்தியைப் பரிசளித்தாள். ஒரு கன்னடப் பெண் என் கையைப் பார் . என்று காட்டினாள். நான் பார்த்து நல்ல குறி சொன்னேன். அவள் இந்தக் காதோலை தந்தாள். இன்னும் கேள் அம்மே ! ஓர் ஆங்கிலப் பெண்ணும் தன் கையைக் காட்டிக் குறி கேட்டாள். அவள் தந்ததே இந்த மேகலை’ என்று அடுக்கினாள்.’ -

குறத்தி சொல்லிய சொல்லை நம்பி மதனவல்லியும் குறி கேட்டாள். அவள் கையை நன்றாகப் பார்த்து, தஞ்சையை ஆளும் சரப மன்னன் உனக்கு இன்னருள் புரிவான் என்று கூறினாள் குறவஞ்சி.

சரபேந்திர குறவஞ்சி நாடகம் தஞ்சைக் கோவிலில் நெடுங்காலம் நடந்து வந்தது. பல கலைகள் உணர்ந்த தஞ்சைச் சரபோசி என்று பாராட்டப் பெற்ற மராட்டிய மன்னன் மாளிகை அழிந்தது; மருத்துவசாலை மறைந்தது. ஆயினும் அவன் ஆசையுடன் தொகுத்த அருமையான நூல் நிலையம் மட்டும் சரஸ்வதி மகால்’ என்னும் பெயரோடு இன்றும் தஞ்சையிலே காட்சி தருகின்றது. -