பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருவையாறு

tேட நாட்டிலே பஞ்ச நதி பாயும் பழனத் திருநாடு பஞ்சாப் என்று பெயர் பெற்றது. அவ்வண்ணமே ஐந்து ஆறுகள் அடுத்தடுத்துச் செல்லும் தென்னாட்டில் அமைந்த தலம் ஒன்று திரு ஐயாறு என்று அழைக்கப்படுகின்றது. தென்னாட்டில் உள்ள திருவையாற்றைப் பஞ்சநதம் என்னும் பெயரால் வழங்குவர் வடமொழியாளர்.

காவிரித் தாயின் திருக்கரத்தால் அணைக்கப் பெற்ற ஐயாற்றின் அழகினைக் கண்டார் திருநாவுக்கரசர், ஆனந்தம் கொண்டார். திருவையாற்றின் முத்திசையிலும் காவிரியின் கிளையாறுகள் பரந்து பாயும் அழகும், அவற்றில் மாசற நீராடி ஈசனார் கோவிலிற் போந்து வழிபடும் அடியார் கோலமும் திருநாவுக்கரசரது தேவாரத்தால் தெள்ளிதின் விளங்குகின்றன.

காவேரியாற்றிலே இறைவனுக்குரிய துறைகள் பல உண்டு. அத் துறைகளில் அமைந்த கோவில்களும் கோட்டங்களும் பலவாகும். ஆயினும், காவிரிக் கோட்டம் ‘ என்று தேவாரத்தில் சிறப்பிக்கப்பட்ட கோயிலை திருவையாற்றுக் கோயில் ஒன்றே. “ காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளோ” என்று திருவை யாற்றில் அமர்ந்த பெருமானைக் கதறி அழைத்தார் ஒரு திருத்தொண்டர். . -