பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 ஆற்றங்கரையினிலே

அலகுதிறந் தன்ன பல்லினன் ஆகிப் பேழைசெய் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே”

என்று அவர் பாடிய பாட்டைக் கேட்டான் அவ்வழியாக ஆலயத்திற்குச் சென்ற அரசன். நாரையை நோக்கிப் புலவர் பாடிய பாட்டின் நயம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. -

ஆலய வழிபாட்டை முடித்து மாளிகைக்குத் திரும்பிய மன்னன் மனம் சத்திமுற்றப் புலவர் பாடிய நாரைப் பாட்டையே நாடிற்று. நாரையின் நீண்ட அலகிற்குப் பனங் கிழங்கை உவமையாகச் சொல்லிய நயத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் தழைத்தான். மறு நாள் அம்பலத்தில் இருந்த ஏழைப் புலவரை அவைக் களத்திற்கு வருவித்தான்; அவர் பாட்டின் அருமையைப் பாராட்டினான். பெரும் பரிசில் அளித்து அவர் வறுமையைப் போக்கினான்.

இப் புலவர் பிறந்த ஊராகிய சத்திமுற்றம் சாலப் பழமை வாய்ந்தது. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள இவ்வூர் தேவாரப் பாடல் பெற்றுள்ளது.க்

“அத்தா, அடியேன் அடைக்கலம்

கண்டாய் அமரர்கள்தம் சித்தா திருச்சத்தி முற்றத்து

உறையும் சிவக்கொழுந்தே”

என்று மனமுருகிப் பாடினார் திருநாவுக்கரசர்.

இத்தகைய பெருமை சான்ற ஊரின் பெயர் நாளடைவில் சத்தி முத்தம் எனச் சிதைந்து வழங்கலாயிற்று. காற்று, நாற்று என்ற சொற்கள் காத்து, நாத்து என வழங்குதல் போன்று முற்றம் முத்தம் ஆயிற்று. -

இவ்வாறு சிதைந்த அச்சொல்லின் அடியாக எழுந்தது ஒரு சுவையான கதை. சத்தியாகிய உமையாள் சிவனருள்