பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. குரங்காடுதுறை

கனிகளும் கன்னலும் கணக்கின்றித் தரும் காவிரி நாட்டிலே கவலையின்றிக் குரங்குகள் குதி போடும்; கொஞ்சி விளையாடும். இக் காட்சியைக் கண்டு இன்புற்ற பழந் தமிழ் மக்கள் காவிரியாற்றின் இரு துறைகளைக் குரங்கினத்திற்கே உரிமையாக்கி, ‘ குரங்காடுதுறை என்று பெயரிட்டனர்.மந்தியொடு மாந்தரும் செழிப்புற்று வாழும் அத்துறைகள் தேவாரப் பாமாலை பெற்ற பழம்பதிக வாாகும்.

முன்னொரு காலத்தில் வானர நாட்டின் தலைவனாக விளங்கினான் வாலி. அவன் சிறந்த வீரன், சிவனடி போற்றும் சீலன். காவிரிக் கரையில் உள்ள திருவை யாற்றிலும் குரங்காடு துறையிலும் அவன் ஈசனை வணங்கினான் என்று தேவாரம் பாடுகின்றது. .

“ வாலியார் வணங்கி ஏத்தும்

திருவை யாறமர்ந்த தேனே”

என்று சிறப்பித்தார் திருநாவுக்கரசர். காவிரிக்கோட்டம்’ என்று பாராட்டப் பெற்றுள்ள திருவையாற்றுக் கோவிலில் ஈசனை வழிபடும் பேறு பெற்ற வானரத் தலைவனை ‘வாலியார் என்று போற்றினார் திருநெறித் தலைவராகிய திருநாவுக்கரசர். காவிரியாற்றின் வடகரையில் உள்ள ‘ குரங்காடு துறை யிலும் வாலி ஈசனை வழிபட்டான் என்பது திருஞான சம்பந்தர் தேவாரத்தால் தெரிகின்றது.