பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்காடுதுறை - 126

அரக்கர் தலைவனே ! உன் விருப்பத்தின்படியே போர் செய்வோம். வெற்றியும் தோல்வியும் ஒரு வழி நில்லா வென்றவர் தோற்பதும், தோற்றவர் வெல்வதும் வையத்து இயற்கை இப்பொழுதே போர் புரிவோம், வருக!’ என்று அழைத்தான் வாலி. பேராற்றல் உடைய வாலியை ஒரு காலும் வெல்ல முடியாது என்பதை நன்கறிந்த இராவணன், ‘ஐயனே! நின் வாலால் கட்டுண்டு நான் பட்டது போதும். இனி எந்நாளும் உன்னோடு போர் புரிவதில்லை. இன்று முதல் நான் தோழன்’ என்றான். அன்றுதொட்டு வானர மன்னனும் இலங்கை வேந்தனும் மனமொத்த நண்பராயினர்.--

ஆயினும் வாலியின் வாலினாற் கட்டுண்ட வசை வாயினாற் சுட்ட வடுப்போல இலங்கை வேந்தன்பால் நீங்காது நிலைபெற்றது. செருக்குற்ற அம் மன்னனை ஏளனம் செய்யக் கருதிய பகைவர்கள் அந் நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவாராயினர். அன்னவருள் ஒருவன் அனுமன்.

இலங்கைக்குத் தூது சென்று, அசோக வனத்தை அழித்து, அரக்கர் சேனையைச் சிதைத்து, அழிம்பு செய்த அனுமனைப் பிடித்து இராவணன் முன்னே நிறுத்தினான் அவன் மைந்தனான மேகநாதன். தருக்கும் செருக்கும் கொண்ட அரக்கர் கோமான் அனுமனை இகழ்ந்து நோக்கி, அடே ; நீ யார் ? வாசவனோ ? கேசவனோ ? வேலனோ? காலனோ? அயனோ? அரியோ? பூமி தாங்கும் நாகமோ? பூசுரர் விடுத்த பூதமோ? என்று வெடித்த குரலில் வினவினான். இராவணன் எடுத்து அடுக்கு மொழிகளை அமைதியாகக் கேட்ட அனுமன், அரசே! நீ சொல்லிய அனைவரும் அல்லன். அயோத்தி மன்னனாகிய இராமனுக்கு நான் அடிமை செய்வேன்.அனுமன் என்னும் பெயருடையேன். வாலியின் மைந்தன் விடுத்த தூதனாய் இங்கு வந்தேன்’ என்று மாற்றம் உரைத்தான். வாலியின்