பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 - ஆற்றங்கரையினிலே

பெயரைக் கேட்டபோது அரக்கனது அசையாத சென்னி அசைந்தது; குழையாத மனம் குழைந்தது. வன்சொல் வழங்கிய வாய் வணக்கமுற்றது. எதிரே நின்ற தூதனை இனிது நோக்கி, வாலியின் மகன் விடுத்த தூதனா நீ? வலிமை சான்ற வாலி செம்மையாக வாழ்கின்றானா? அவன் அரசாட்சி நன்றாக நடைபெறுகின்றதா?’ என்று வினவினான். அவன் அகத்தில் எழுந்த அச்சத்தை முகத்தில் கண்ட அனுமன், அரக்கனே ! அஞ்சாதே வாலி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டான். இனி வரமாட்டான். அவன் வாலும் அவனோடு போய்விட்டது:

“அஞ்சலை அரக்கபார் விட்டு

அந்தரம் அடைந்தான் அன்றே வெஞ்சின வாலி மீளான்

வாலும்போய் விளிந்த தன்றே !”

என்று ஏளனம் செய்தான்.

இவ்வாறு அசதியாடிய அனுமன் மீது அருஞ் சீற்றம் கொண்டான் அரக்கர் கோமான். குறும்பு செய்த குரங்கின் வாலைச் சுட்டெரிக்குமாறு பணித்தான். அப்பணி தலைமேற்கொண்ட அரக்கர்கள் அனுமன் வாலில் தீக் கொளுவினர். அத் தீயோர் இட்ட தீயை இலங்கையிலே வைத்துவிட்டு இராமனிடம் திரும்பிச் சென்றான் அவ் வீரன்.

அனுமன் வைத்த தீயால் இலங்கையின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது. இராவணன் மானத்தால் மனம் கொதித்தான். இலங்கை அமைச்சரும், படைத் தலைவரும் வீரம் பேசி அவன் மனத்தில் எழுந்த சீற்றத்தை வளர்த்தார்கள். அப்போது அறிஞனாகிய விபீஷணன் பணிவுடன் எழுந்து அறிவுரை பகரலுற்றான். ஐயனே ! கட்டும் காவலும் உடைய இலங்கை மாநகரை ஒரு குரங்கு சுட்டது என்று சொல்லுதல் சரியோ? அசோக வனத்தில்