பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஆற்றங்கரையினிலே

தேனாறு சேர நாட்டிலே நெய்யாறு உண்டு. பாலாறு என்று பெயர் பெற்ற ஆற்றிலே நீர் சுரக்கும். தேனாற்றிலே நீர் சொட்டும்; நெய்யாற்றிலே நீர் துளிக்கும். பாலையும், தேனையும், நெய்யையும் அளவறிந்து ஊட்டிப் பிள்ளையைப் பேணி வளர்க்கும் தாய்போல், ஊற்றுப் பெருக்கால் நிலத்திற்கு நீருட்டி நலம் பயக்கும் நதிகளை நல்ல பெயரிட்டு அழைத்தனர். நன்றி மிக்க தமிழ் நாட்டார். தமிழகத்தை வாழ்விக்கும் ஆறுகளில் சிலவற்றைப் புகழ்ந்து பாடினார் பாரதியார்.

“ காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி - என

மேவிய யாறு பலஓடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு” என்ற பாட்டில் ஐந்து ஆறுகள் குறிக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் வையையும், பொருனையும் பாண்டி நாட்டில் உள்ள ஆறுகள். பொய்யறியாப் புலவர்களின் பாமாலை பெற்ற பாண்டியர் குலக் கொடியாகிய வைகையை,

“புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி - வையை என்ற பொய்யாக் குலக்கொடி’ என்று போற்றினார் இளங்கோவடிகள்.

தென்பாண்டி நாட்டின் உயிரெனத் திகழும் பொருனையாற்றை,

“பொன்திணிந்த புனல்பெருகும்

பொருனைஎனும் திருநதி’ என்று புகழ்ந்து பாடினார் கம்பர். முன்னாளில் ‘பொன்’ என்னும் சொல் பொதுவாக உலோகங்களுக்கெல்லாம் உரிய பெயராக வழங்கிற்று. பொருனையாற்று நீரில் கலந்துள்ள தாமிரச் சத்தினைத் தெரிந்து,” பொன் திணிந்த