பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13; - ஆற்றங்கரையினிலே

சேர்ந்தார்; வாரும் தோலும் வரிசையாக எடுத்தார். பள்ளுப் பாட்டிசைத்தார். திருப்புன்கூரை வந்தடைந்தார்.

திருக்கோயிலின் முன்னே நின்று நந்தனார் துள்ளிக் குதித்தார்; சிவஞானத் தேனை அள்ளிக் குடித்தார். ஈசனே ! சிவலோக நாதனே இந்த ஈனப்பறையருக்கு அருள் புரிய லாகாதா? உன்னி உன்னிப் பார்த்தாலும் உன் திருமேனி தெரியவில்லையே வளைந்து குனிந்து பார்த்தாலும் உன் வடிவத்தைக் காணும் வகையில்லையே மலைபோல் ஒரு மாடு கிடந்து மறைக்குதே !

“ வழிமறைத் திருக்குதே மலைபோலே

ஒரு மாடு படுத்திருக்குதே “ என்று முறையிட்டார். அந்நிலையில் ஈசன் அருளால் நந்தி விலகிற்று நாதன் மேனி விளங்கிற்று. நந்தனார் கண்டார்; ஆனந்தம் கொண்டார். குதித்துக் குதித்துக் கும்பிட்டார்; துதித்துத் துதித்துத் துள்ளினார்; போற்றி போற்றி என்று பொன்னடி வணங்கினார். பிரியா விடை பெற்றுத் திரும்பி ஆதனுரரை வந்தடைந்தார்.

நந்தனார்க்காக நந்தியைச் சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று பணித்த ஈசன் அவ்வூரில் நிகழ்த்திய மற்றொரு அற்புதச் செயல் தேவாரத்தில் குறிக்கப் பட்டுள்ளது. ஒருகால் சோழ நாட்டிலே வானம் பொய்த்தது; வயல் காய்ந்தது; தண்ணீர் இன்றி மக்கள் கண்ணிர் சொரிந்தனர். அப்போது அவ்வூருக்கு வந்தருளினார் சுந்தரமூர்த்தி. ஆலயத்தில் அவுரைக் கண்டு தமது குறையை முறையிட்டனர் திருப்புன்கூர் மக்கள். கயிலாச நாதன் அருளால் காலத்தில் மழை பெய்யுமாயின் பன்னிரு வேலி நிலம் ஆலயத்திற்குத் தருவதாக வாக்களித்தார்கள். அந்நிலையில் வானம் கறுத்தது; மேகம் திரண்டது; மின்னொளி கண்னொளியைப் பறித்தது; பெருமழை பிடித்தது. நாள் முழுவதும் விடாமல் பெய்தது.