பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதனுர் 132 ஆற்றிலே வெள்ளம் பொங்கிற்று; நிலமெல்லாம் நீரிலே மூழ்கிற்று. அச்சமுற்ற குடிகள் மீண்டும் ஆலயத்திற் போந்து மழையை நிறுத்த வேண்டும் என்று மாதேவனிடம் முறை விட்டார்கள். அழிவு செய்யாமல் மழை நின்றுவிட்டால், மேலும் பன்னிரு வேலிநிலம் தருவதாக ஒப்புக் கொண்டார்கள். அப்போது மழை நின்றது; வெள்ளம் வடிந்தது. வேளாண்மை சிறந்தது. வாக்களித்த நிலம் சிவலோக நாதனைச் சேர்ந்தது. திருவருளால் நிகழ்ந்த இச் செயலைத் தெரிவிக்கின்றது ஒரு தேவாரப் பாட்டு,

“ வையக முற்றும் மாமழை மறந்து

வயலில் நீரிலை மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன

ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்து எங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்

செழும்பொழில் திருப்புன் கூர்உ ளனே”

என்பது சுந்தரர் திருவாக்கு.

இத்தகைய தண்ணளி வாய்ந்த ஈசன் புகழைப் பேசத் தலைப்பட்டார், நந்தனார். சேரி முழுவதும் சிவமணம் கமழ்ந்தது. இந்த நிலையில் மார்கழித்திங்கள் பிறந்தது. நந்தனார் மனம் சிதம்பரத்தை நாடிற்று; அல்லும் பகலும் தில்லைச் சிற்றம்பலத்தின் எல்லையற்ற பெருமையைச் சொல்லிச் சொல்லி ஆனந்தத்தில் மூழ்கினார். சிவனே தெய்வம் சிதம்பரமே கைலாசம் என்று தில்லையைத் திசை நோக்கித் தொழுதார்.

“நாளைப் போகாமல் இருப்பேனோ - தில்லை

நாதனைக் காணாமல் புசிப்பேனோ - நான்” என்று ஊண் உறக்கமற்றுச் சேரியைச் சுற்றித் திரிந்தார். ‘நாளைப் போவேன்’ என்று நாள்தோறும் சொல்லிய