பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 ஆற்றங்கரையினிலே

தொண்டரை நாளைப் போவார் என்றே ஆதனுரர் வாசிகள் அழைப்பார் ஆயினர்.

தில்லைச் சிற்றம்பலமே நந்தனார் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து நின்றது. குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், பனித்த சடையும், பவளம் போல் மேனியும் உடைய பரமன் அங்கே ஆனந்த நடம் புரியும் அழகினை எண்ணி எண்ணி உள்ளம் தழைத்தார்.’ அதனைக் கண்டே தீர்வேன் என்று புறப்பட்டார்.

“ஆடிய பாதத்தைத் தாரும் - உம்மைத்

தேடிவந்தேன் இதோ - பாரும் பாரும்” என்று பரவசமுற்றுப் பாடினார். தில்லைத் தலத்தைக் கண்டார்; தொல்லைக் கவலை விண்டார்.

- மெய்யடியாராகிய நந்தனாரை வருக என்று அழைத்தான் ஈசன், அந்தமில்லாப் பேரின்பம் அளித்தான்.

அவர் பிறந்தருளும் பேறு பெற்ற ஆதனூர் இன்று ஆதமங்கலம் என்று அழைக்கப் பெறுகின்றது.