பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. திரு ஆப்பாடி

பசுக்களைப் பேணி வளர்ப்பது பாரத நாட்டின் பண்பாடு அவை மேய்வதற்கென்றே சில காடுகளை ஒதுக்கி வைத்தனர் பழங்கால மன்னர். அக் காடுகளில் இயற்கையாக மழையில் முளைத்து வளரும் புல்லை மேய்ந்து, மாந்தர்க்கு நல்ல பாலைத் தரும் பசுவின் கருணையைப் புலவர்கள் பாடி மகிழ்ந்தார்கள்.

“ விடுதில'மருங்கில் படுபுல் ஆர்ந்து

நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்

பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்

அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும்” பசுவிற்குத் தீங்கிழைத்தல் ஆகாது என்று மணிமேகலை பாடிற்று. பாலிற் சிறந்தது பசுவின் பால் என்பது இந் நாட்டுப் பழங் கொள்கை’

பாற் பசுக்களைப் பரிந்து பேணிப் பாதுகாத்தான் பரந்தாமன்; அதனால் கோபாலன் என்ற பெயரும் பெற்றான், தென்னாட்டிலே மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்ட இடையர், கோபாலர் என்றும் கோவலர் என்றும் அழைக்கப்படுவர். -

“ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டிைைல” என்று அவர் வாழ்க்கையின் செம்மையைச் சிவப்பதிகாரம் வியந்து பாடிற்று. -