பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 ஆற்றங்கரையினிலே

அந் நாளில் வாழ்ந்த கோவலர் சூதும் வாதும் அறியாதவர்; பாலைச் சுருக்கி நீரைப் பெருக்கும் பழக்க மற்றவர்; துள்ளி விளையாடும் பாற் கன்றுகளைத் தோற் கன்றுகளாக்கும் பான்மை தெரியாதவர்.

சோழ நாட்டில் உள்ள மணியாற்றின் கரையிலே பசும்புல் நிறைந்த படுகை ஒன்று உண்டு. முன்னாளில் பசுக் குலம் அங்கே செழித்து வளர்ந்தது. அதனால் ஆப்பாடி என்ற பெயர் அதற்கு அமைந்தது. ஆற்றின் தென் கரையில் அழகிய சோலையின் நடுவே நின்றது. திரு ஆப்பாடி’ அதைச் சுற்றியிருந்த பல ஊர்களிலிருந்தும் பசுக்கள் அங்கு வந்து வயிறார மேய்ந்து அந்திப் பொழுதில் மீண்டு செல்வது வழக்கம்.

அத்தகைய ஊர்களில் ஒன்று சேய்ஞலூர் என்னும் மூதுர். சேய் என்றும், சேயோன் என்றும் செந்தமிழ் நூல்களில் குறிக்கப்படும் முருகப் பெருமானுடைய பெயர் தாங்கி நிற்பது அந் நல்லூர். அவ்வூரிலே வாழ்ந்தான் ஓர் இளைஞன், அவன் அருங்கலைச் செல்வன் அருள் நிறைந்த நெஞ்சினன். ஒரு நாள் அவன் தெரு வழியே சென்று கொண்டிருக்கையில் கன்றை ஈன்ற பசுவை ஒர் இடையன் பெருங் கழியால் அடித்து வருத்துவதைக் கண்டான்; இரக்கம் கொண்டான். அக் கொடுமையைத் தடுத்தான்; பசுக்குலத்தின் பெருமையை இடையனுக்கு எடுத்துரைத் தான்.

அவ்வுரை கேட்டுத் திகைத்து நின்ற ஆயனை நோக்கி, இப் பசு மந்தையை இனி நாள்தோறும் நானே ஆப்பாடியிற் கொண்டு மேய்த்து வருவேன்’ என்றான். ஆயனும் அதற்கு இசைந்து அகன்றான். அன்று முதல் விசாரசருமன் என்னும் இவ் இளைஞன் மாடு மேய்க்கும் பணியை மேற்கொண்டான்; பசும் புல் நிறைந்த இடம் பார்த்துப் பசுக்களை ம்ேயவிட்டான்; எட்டாத இடங்களிற்