பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறும் ஊரும் 12 புனல் பெருகும் பொருனை” என்று கம்பர் பாடினார் போலும் ! -

இத்தகைய ஆற்றின் கரைகளில் ஊர்களும் நகரங்களும் எழுந்தன. “ஆறில்லா ஊருக்கு அழகில்லை ” என்னும் பழமொழியும் பிறந்தது. சோழ நாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரியாற்றங்கரையில் வீற்றிருந்தது. பாண்டி நாட்டின் தலைநகரமாகிய மதுரை வையை ஆற்றங் கரையில் வளர்ந்து சிறந்தது. சேர நாட்டின் தலைநகரமாகிய வஞ்சியும் ஒர் ஆற்றின் கரையில் இருந்ததாகக் கருதப்படுகின்றது. எனவே, ஆற்றங் கரையிலே பிறந்து வளர்ந்தது தமிழ் நாட்டின் பண்பாடு என்பதில் ஐயமுண்டோ?