பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர் 146 சோழ மன்னனுக்குரிய பட்டத்து யானையையும் பாகரையும் எறிபத்தர் கொன்றார் என்ற செய்தி கருவூரெங்கும் பரவியது: அரண்மனைக் காவலாளர் அச்செய்தியைப் புகழ்ச் சோழனிடம் போந்து அறிவித்தார்கள் பட்டவர்த்தனம் வெட்டி வீழ்த்தப் பட்டது; பாகரும் கொல்லப்பட்டார் என்று கேள்வியுற்ற சோழன் சீற்றத்தால் கண் சிவந்தான்; அது மாற்றார் செய்கை என்றெண்ணி ம்றப்படையோடு எழுந்தான் குதிரைமீது ஏறிக் கொலைக்களம் போந்தான். குருதி வெள்ளத்திற் கிடந்த அருமை வேழத்தைக் கண்டு மனம் உருகினான்;பாகர் கிடந்த நிலைகண்டு துயருற்றான். இக் கொலை புரிந்த கொடியவர் யார் ? என்று கடுகடுத்து வினவினான். அப்போது தூய வெண்ணிறு துதைந்த மேனியராய், அங்கு நின்ற எறிபத்தர் முன் வந்து, மன்னவ ! இந்த யானை சிவனடியார் ஒருவருக்குச் சிறுமை செய்தது. ஆதலால் நானே இதனைக் கொன்றேன் என்றார்:

அவர் பேசிய நேர்மையான வாசகத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான். அரசன். பட்டத்து யானை செய்த குற்றத்திற்கு உரியவன் யிானே ! என்னையும் உமது திருக்கரத்தால் முடித்திடுக’ என்று தலை வணங்கி நின்றான் மன்னவன். காவலன் நிலை கண்ட கருவூர் மாந்தரெல்லாம் கண்னிர் விட்டு அழுதார்கள். அந்நிலையில் ஈசன் அருளால் இறந்த யானை எழுந்தது; பாகரும் உயிர் பெற்றனர்.” தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே’ என்னும் உண்மைக்கு ஒரு சான்று கண்டது கருவூர் நகரம்.