பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. காரைக்கால்

அம்மை என்பது ஒர் அருமையான சொல். அதன் செம்மையை உணர்ந்த மாணிக்கவாசகர் “அம்மையே ! அப்பா ! ஒப்பிலர் மணியே ! அன்பினில் விளைந்த

ஆரமுதே “ என்று ஆதிபகவனை அகங் குழைந்து பாடினார்.

தமிழ் நாட்டிலுள்ள காரைக்காலிலே ஒரு தெய்வப் பாவை அம்மையார் என்று அழைக்கப் பெற்றாள். அரிசிலாறு கடலொடு கலக்கும் துறையில் அமைந்தது காரைக்கால். அந்நகரில் வளமார்ந்த வணிகர் குலத் தலைவனாகிய தனதத்தன் செய்த தவப் பயனாய்த் தோன்றினாள் அப்பாவை. புனிதவதி என்னும் பெயர் பெற்ற அப் பெண்மணி அழகின் கொழுந்தெனத் திகழ்ந்து வளர்ந்தாள்; மங்கைப் பருவம் எய்தினாள். நாகையம் பதியில் வாழ்ந்த பரம தத்தன் என்ற நம்பிக்கு அந் நங்கையை மணம்செய்து கொடுத்தார்கள்.

குல நலமும் குண நலமும் வாய்ந்த காதல் மனையாளும் காதலனும் கருத்தொருமித்து இல்லறம் நிகழ்த்தினர். அறவோர்க்கும் துறவோர்க்கும் ஆதர வளித்தனர்:

இவ்வாறு இருவரும் வாழ்ந்து வருகையில் புனிதவதி யாரின் இணையற்ற சீர்மை பரம தத்தனுக்குப் புலனாயிற்று.