பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தொண்டை நாடு

“ பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்

பாளைவிரி மனங்கமழ்பூஞ் சோலை தோறும் காலாறு கோலிஇசை பாட நீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாடு”

சேக்கிழார் புராணம் 1. காஞ்சி மாநகரம்

தமிழ் நாட்டிலே பண்டைப் பெருமை வாய்ந்தது தொண்டை நன்னாடு. இந்நாட்டில் பாலாறு வளம் காக்கும்; பண்பாடு தலைசிறக்கும்.

சான்றோர் பலர் தொண்டை நாட்டிலே தோன்றினர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான் புகழ் கொண்ட நாடு தொண்டை நன்னாடே 1 முதல் ஆழ்வார்கள் மூவரையும் ஈன்ற பெருமை யுடையதும் இந்நாடே தொண்டர்சீர் பரவிய குன்றை முனிவராகிய சேக்கிழாரைத் தந்ததும் இந்நாடே !

இவ்வாறு சான்றோர் பலரை ஈன்றெடுத்த தொண்டை நாட்டில் நெடியோன் குன்றமாகிய திருவேங்கடம் உண்டு; கண்ணப்பன் பணி செய்த காளத்தி மலை உண்டு; தமிழ் முருகன் அருள்புரியும் தணிகை மலை உண்டு; களிறும் பிடியும் வலஞ் செய்து வணங்கும் கழுக்குன்றம் உண்டு. மாநிலம் கண்டு மகிழும் கலைக் கோயில்களை உடைய