பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$49 ஆற்றங்கரையினிலே

கொண்ட கணவனுக்காக இவ்வுடலைப் பேணினேன். இனி இவ்ஊன் பொதியை யான் வேண்டேன்; உன் திருவருளே வேண்டி நிற்பேன். இம் மண்ணிலே பிறந்து மொழி பயின்ற கால முதல் உன் திருவடியே எண்ணினேன். உன் திருப்புகழே பேசினேன். நஞ்சுண்டு கண்டம் கறுத்த நாதனே ! என் நெஞ்சத்து இடர் தீர்ப்பது எந்நாளோ ?” என்று இறைஞ்சினார்.

தனக்குவமையில்லாத் தலைவனாகிய ஈசன் விண்ணுல கத்தில் உள்ளான் என்று சொல்லுவார் சொல்லுக. பொன்னுலகத்தில் உள்ளான் என்று பேசுவார் பேசுக. அவன் என் உள்ளத்திலே உள்ளான் என்றுரைப்ப்ன் யான் ‘ என்று உறுதிகொண்டார்.

“வானகத்தான் என்பாரும்

என்கமற்று உம்பர்கோன் தானத்தான் என்பாரும்

தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தால்இருண்ட

மொய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தான்என்பன் யான்” என்று பாடினார்; ஆனந்தமுற்று ஆடினார்; மேனி வாடினார்; எலும்புக் கூடாயினார். காரைக்கால் பேயார் என்ற பெயரும் பெற்றார்.

கயிலாச மலையில் அமர்ந்தருளும் கண்ணுதற் பெருங் கடவுளைக் காணும் பேறு பெற்றார் காரைக்கால் அம்மையார் எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய ஈசனிடம் தம் மனத்தில் எழுந்த ஆசையைச் சொல்லி முறையிட்டார். என்னை ஆளும் ஐயனே ! உன்பால் எந்நாளும் அயராத இன்ப அன்பு வேண்டும்; இனி நான் பிறவாதிருக்க வேண்டும்; பிறப்பு நேர்ந்தால் உன்னை என்றும்