பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவை மாநகர் 152

உழைப்பினால் உயர்ந்தார் மதி நலத்தால் மாண்புற்றார். பிரஞ்சு அரசாங்கத்தின் பெரு மதிப்பிற்கு உரியரானார்.

செல்வச் செழுமையுற்று வாழ்ந்த ஆனந்தரங்கர் செந்தமிழை ஆதரித்தார்; வரிசை யறிந்து புலவர்க்குப் பரிசளித்தார்; வாடி வந்தடைந்த அறிஞரது வறுமையை ஒழித்து இன்புற்றார்.

அற்றாரை ஆதரிக்கும் பெற்றி வாய்ந்த ஆனந்த ரங்கரின் பெருமையை அறிந்தார், மதுர கவிராயர், புதுவையை நோக்கிப் புறப்பட்டார். புள்ளும் பொழுதும் பார்த்து உள்ளம் தழைத்தார். மஞ்சு தவழும் அம்மணி நகரில் அஞ்சேல் என்று அருள்புரியும் ஆனந்தரங்கரைக் கண்டார்;

“பொலங்கொண்ட மணிமாட மீமிசையில்

புயல்தவழும் புதுவை என்னும் தலம்கண்டோம் நினதுநகை முகம்கண்டோம்

இனிவேண்டும் தனம்கண் டோமே”

என்று நெஞ்சம் குளிர்ந்து பாடினார். பசியென்னும் தீப் பிணியால் வருந்திய கவிஞர் ஒருவர் பலநாள் வழி நடந்து ஆனந்தரங்கரது மாளிகையை அடைந்தார். அப்போது அவர் அங்கில்லை. அறுவடைக் காலமாதலால் நிலத்தைக் கண்காணிக்கச் சென்றிருந்தார்; அவர் எப்போது வருவாதோ என்று ஏக்கமுற்ற கவிஞர் கழனிக்கு வழிநாடிச் சென்றார். அங்கு வரப்பிலே சிதறிக் கிடந்த நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சேர்த்துக்கொண்டிருந்த வள்ளலைக் கண்டார். உதிர்ந்த நெல்லை ஒன்று விடாமல் களஞ்சியத்திற் கொண்டு சேர்க்கும் இவரா வறிஞருக்கும் அறிஞருக்கும் உண்டியும் பொருளும் வழங்குகின்றார்

என்று ஐயுற்றார். ஆயினும் ஒருவாறு மனந் தெளிந்து தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தார். ஆனந்தரங்கர் மறுமொழி ஒன்றும் சொல்லாமல் நெல்லைப் பொறுக்கும் பணியில்