பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 ஆற்றங்கரையினிலே

மதுரையம்பதியில் அரசு புரிந்த பாண்டிய மன்னரில் பலர் சிறந்த கவிஞர்களாகவும் புலவர்களாகவும் திகழ்ந்தனர். நெடுஞ்செழியன் என்னும் பெயருடைய பாண்டியரிருவர் பாடிய அருமையான பாடல்கள் புறநானூற்றிலே காணப்படுகின்றன. மக்களாய்ப் பிறந்தோர் எல்லாம் கல்வி கற்றல் வேண்டும் என்றும், அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான் என்றும், மதிநலமும் நூலறிவும் உடையவரே மக்கள் மதிப்பிற்கு உரியவர் என்றும் அறிவுறுத்தும் அருமையான பாட்டு ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனால் இயற்றப்பட்டதாகும்.

இத்தகைய தமிழார்வம் படைத்த மன்னர் அரசு வீற் றிருந்த மதுரை மாநகரில் தமிழ்வளம் பெருகிற்று. பல தொழில்களிலும் ஈடுபட்ட மக்கள் தமிழறிவு பெற்றுத் தக்க புலவர்களாய் விளங்கினர். அன்னவருள் ஒருவர் கூலவாணிகன் சாத்தனார். கூலக்கடை வைத்து வாணிகம் செய்த சாத்தனார் கூல வாணிகன் சாத்தனார் என்று பெயர் பெற்றார். இவரே மணிமேகலை என்ற சிறந்த காவியம் இயற்றியவர் என்பர். சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடி களும், மணிமேகலை இயற்றிய சாத்தனாரும் சிறந்த நண்பர்கள். இவ்விருவரும் ஒரு நாட்டவரல்லர் ஒரு குலத்தவரல்லர்; ஒரு மதத்தினரல்லர். சேரநாட்டைச் சேர்ந்தவர் இளங்கோ, பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் சாத்தனார். இளங்கோ, அரச குலத்தில் பிறந்தவர்; சாத்தனார் வணிகர் குலத்தவர். இளங்கோ, சமண சமயத்தைச் சார்ந்தவர்; சாத்தனார், புத்த சமயத்தைத் தழுவியவர். இவ்வாறு நாட்டாலும், குலத்தாலும், மதத்தாலும் வேறுபட்டிருந்த பெருங் கவிஞர் இருவரும் ஒத்த தமிழுணர்ச்சியாலேயே உயரிய நண்பராயினர்.

பாண்டிய மன்னர் கற்றறிந்த மாந்தரைக் கண்ணெனக் கருதிப் பாதுகாப்பவர் என்ற செய்தி வடநாட்டிலும் பரவி யிருந்தது. அந்நாட்டில் ஒருகால் பஞ்சம் வந்துற்றபோது