பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் 156

பல்லாயிரக் கணக்கான மக்கள் தென்னாட்டிற் போந்து பாண்டியனைத் தஞ்சமடைந்தார்கள். அன்னார் சமண சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்க்கு உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கொடுத்து ஆதரித்தான் பாண்டியன். தமிழ் மன்னனது நன்மதிப்பைப் பெற ஆசைப்பட்ட சமணர்கள் தமிழ்மொழியை மாசறக் கற்று உணர்ந்தார்கள்; மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டு மலைகளைத் தம் இருப்பிடமாகக் கொண்டு கவலையின்றி வாழ்ந்தார்கள். அவ்வெட்டு மலைகளின் பெயரும் பெருமையும் ஒரு பழம்பாட்டிலே குறிக்கப் பெற்றுள்ளன:

அம்மலைகளிலே வாழ்ந்த சமண முனிவர்கள் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பாடல்களை இயற்றினர். அவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட நானுறு நீதிச் செய்யுள்கள் நாலடி யார் என்ற பெயருடன் இன்றும் வழங்கி வருகின்றன. இரண்டு அடிகளை உடைய திருக்குறளும், நான்கு அடிகளை உடைய நாலடியாரும் நீதி நூல்களுள் தலைசிறந்தன என்பது தமிழ்நாட்டார் கொள்கை. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்னும் பழமொழியே இதற்குச் சான்றாகும்.

மதுரை மாநகரின் அணிகலனாகத் திகழ்வது இறைவன் திருக்கோயில் ஆலவாய்’ என்னும் பெயருடைய அவ் ஆலயத்தின் அம்பலத்திலே ஈசன் ஆனந்த நடனம் புரிந்தான்: மணிவாசகரின் திருவாசகத்தைக் கேட்டு மனமகிழ்ந்தான் சங்கப்புலவரின் அறிவினுக்கு அறிவாய் நின்று செந்தமிழ் மொழியைச் சீராக வளர்த்தான்; பழந்தமிழைப் பசுந் தமிழாக்கினான்.”

ஆலவாயில் நிறுவப் பெற்ற அருந்தமிழ்ச் சங்கத்தின் தலைவராக வீற்றிருந்தார் நக்கீரர் என்ற நற்றமிழ்ப் புலவர். அவர் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சடைக்கடவுளே முன்னின்று நெற்றிக் கண்ணைக் காட்டியபோதும்