பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் #58

“ ஒருங்கு திரை உலவு சடை

உடையானே நரிகள் எல்லாம்

பெருங் குதிரை ஆக்கியவாறு

அன்றே உன் பேரருளே’

என்று பாடிப் பரவசம் உற்றார்.

தமிழ் நாட்டில் மணிவாசகர் அருளிய திருவாசகம் பொன்னே போல் போற்றப் படுகின்றது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் ‘ என்ற பழமொழியும் உண்டு. இத்தகைய பெருமை சான்ற மாணிக்கவாசகரை அமைச்சராகப் பெற்றிருந்த மதுரையம் பதியின் பெருமை அளவிடற்கு எளிதோ?

பன்னிரு நூற்றாண்டுகளுக்கு முன்னே மதுரையம்பதி யில் சமண சமயத்திற்கும் சைவசமயத்திற்கும் பெரும்போர் மூண்டது. அப்போது பாண்டி நாட்டை ஆண்ட அரசன் சமண சமயத்தைத் தழுவி நின்றான். மன்னனைப் பின்பற்றி நாட்டு மக்களும் சமண சமயத்தை மேற்கொண்டார்கள். ஆயினும் பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியும், அமைச்சராகிய குலச்சிறையாரும் சைவ சமயத்தை விடாது பற்றி நின்றார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து திருநெறித் தலைவராகிய திருஞானசம்பந்தர் மதுரை மாநகருக்கு எழுந்தருளினார். யானைமலை முதலாய எட்டு மலைகளிலும் இருந்த சமண முனிவர்கள் திரண்டு எழுந்து எதிர்த்தார்கள். வாக்குவாதம் மிகத் தாக்காக நடைபெற்றது. பாண்டிய மன்னன் மாளிகையில் பல்லாயிரக் கணக்காகக் குழுமிநின்ற சமண முனிவர்களின் எதிரே பச்சிளம்பாலராக நின்ற திருஞான சம்பந்தரின் நிலை கண்டு ஏக்கமும் இரக்கமும் உற்றார் மங்கையர்க் கரசியார்; ஞானத்தின் திரு உருவாகிய சம்பந்தரைச் சமண முனிவர்கள் அச்சுறுத்துவார்களோ, அவமதிப்பார்களோ என்று அஞ்சினார். மங்கையர்க்கரசியின் கவலையறிந்த

ஞானசம்பந்தர், அஞ்சேல் என்று ஆறுதல் அளித்தார்;