பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 ஆற்றங்கரையினிலே

ஆலவாய்ப் பெருமான் அருளால் சமணரை எளிதில் வெல்வேன்’ என்று தேற்றினார்.”

சமண முனிவர்களும் திருஞான சம்பந்தரும் வைகை ஆற்றிலே புனல் வாதம் புரிந்தார்கள். அந்த வாதத்தில் சமணர் தோற்றார்; சம்பந்தர் வென்றார். பாண்டிய மன்னனும் சமண சமயத்தை விட்டு மீண்டும் சைவ சமயத்தைச் சார்ந்தான். மன்னன் முன்னிலையில் நிகழ்ந்த புனல் வாதத்தின் பெருமையைப் பாட்டில் அமைத்துப் பாராட்டினர் ப்ாவலர்.

“பொருப்பிலே பிறந்து தென்னன்

புகழிலே கிடந்து சங்கத்து இருப்பிலே இருந்து வைகை

ஏட்டிலே தவழ்ந்த பேதை ”

என்று போற்றினார் ஒரு கவிஞர். இங்ஙனம் தமிழ்ச் சுவை அறிந்த தன்மையால் அன்றோ ஆற்றுப் பெருக்கற்ற காலத்திலும் தன் ஊற்றுப் பெருக்கால் செந்தமிழ் பயிலும் மதுரை மாநகரை வாழ்வித்து வருகின்றது வைகை யாறு?

ஆலவாயில் உள்ள வெள்ளியம்பலம் தமிழ் நாட்டார் போற்றும் பஞ்ச சபைகளில் ஒன்றாகும். அம் மன்றத்திலே இறைவன் ஆடிய திருக்கூத்தின் அழகைக் கண்டு மெய் மறந்த அடியார் ஒருவர் ‘கால் மாறி ஆடிய கற்பகமே ! யான் உன்னை விடுவேன் அல்லேன் என்று கதறினார்.

இவ்வாறு ஆலவாயில் அங்கயற் கண்ணியோடு அமர்ந்து அருள் புரியும் ஈசன் பெருமையை அடியார் அடிக்கடி புகழக் கேட்டு மதுரையில் வாழும் கிளிகளும் மதுர மொழியால் அப் பெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைத்தன என்று பாடினார் ஒரு கவிஞர். -