பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அழகர் கோயில்

மதுரை மாநகரின் அருகே உள்ள மலைகளுள் ஒன்று சிறுமலை மற்றொன்று பெருமலை, சிறுமலையிலே இனிய பழம் உண்டு; பெருமலையிலே ஈசன் அருள் உண்டு.

இந் நாளிலே அழகர் மலை என்றும், சோலைமலை என்றும் பெயர் பெற்றுள்ளது அப் பெருமலை, அம்மலையில் ஒல்லென ஒலித்து, மெல்லெனப் பாயும் அழகிய நதியைச் சிலம்பாறு என்று பழந்தமிழிலக்கியம் போற்றுகின்றது. அவ் ஆறு பழமுதிர் சோலையின் வழியே சென்று, அருவியாக வீழும் அழகினைக் கண்டு அக மகிழ்ந்த நற்றமிழ்ப் புலவர்களில் ஒருவர் நக்ரேர். அவர் பாடிய திருமுருகாற்றுப்படையில்

“இழுமென இழிதரும் அருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே :

என்று சிலம்பாற்றின் அருவியை ஒரு செஞ்சொல் ஒவியமாக எழுதிக் காட்டினார். சிலம்பாற்றின் நல்வருவிக்கு நிகரான செஞ்சொல் அருவியின் இன்பம் தருவது இப்பாட்டு சிறப்பு ழகரத்தை நான்கு இடங்களில் நன்கு அமைத்து நல்ல தமிழின்பத்தை ஊட்டுகின்றார் நக்கீரர்.

திருமுருகாற்றுப்படையிலே பாடப் பெற்றுள்ள பழமுதிர் சோலை, முருகப் பெருமானுக்குரிய படை வீடுகளில் ஒன்று. அதன் பழம்பெருமையைத் திருப்புகழும் பாடிற்று.

1 :