பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகர் கோயில் - 162

“ படையொடு சூரன் மாள

முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு பெருமாளே !”

என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரின் திருவாக்கு

பழமுதிர் சோலைமலை என்ற நெடும் பெயர் நாளடைவில் சோலைமலை எனக் குறுகிற்று. வல்லகரனாகிய சூரன் குலத்தை வென்று ஒழித்து, வாகை மாலை சூடிய முருகன், சோலைமலையில் நின்று அடியார்க்கு அருள் புரியும் செம்மையை நினைந்து சிந்தை குளிர்ந்தார் அருணகிரியார்.

“ சூரர்குலம் வென்று

வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே !”

என்று புகழ் மாலை சூட்டினார். எனவே, பழமுதிர் சோலை என்னும் பழம் பெயருடைய முருகனது படை வீடே இப் பொழுது சோலை மலை என வழங்குகின்றது என்பதில் ஐயமில்லை.

பழங்காலத்தில் இருங் குன்றம் என்ற பெயருடைய தாய் இருந்தது இம்மலை. இருங்குன்றம் என்ற சொல்லுக்குப் பெருமலை என்பது பொருள். முன்னாளில் இருங்குன்றம் முதலிய எட்டு மலைகளில் சமண முனிவர்கள் தவச்சாலை யமைத்து வாழ்ந்தார்கள் என்பது அங்குள்ள கல்லெழுத்துகளாலும் தேவாரத் திருப்பாசுரங் களாலும் தெளிவாகத் தெரிகின்றது. அச்ச நந்தி என்பார் அத்தகைய முனிவர்களுள் ஒருவர். நந்தி என்பது சமண முனிவர்களின் சிறப்புப் பெயராக அந்நாளில் வழங்கிற்று.

இருங்குன்றத்தில் சமண முனிவர்கள் வதிந்து தவம் புரிந்த இடம் இப்போது பஞ்ச பாண்டவர் படுக்கை என்று பொது மக்களால் அழைக்கப் படுகின்றது. அதைச் சென்று காண்பதற்குச் செம்மையான வழி இல்லை. கரடு