பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ஆற்றங்கரையினிலே

முரடான கற்களின் இடையே நடந்து வழுக்குப் பாறைகளின்மீது தவழ்ந்து, இடுக்கு வழிகளைக் கடந்து மேலே சென்றால் அருமையான குகை யொன்றைக் காணலாம். செழுமை வாய்ந்த ஆலஞ் சோலையின் நிழலில், சவியுறத் தெளிந்த சுனையின் அருகே அமைந்துள்ள அக்குகை ஒருமையுடன் இருந்து தவம் புரிவார்க்கு ஏற்ற இடமாகவே தோன்றுகின்றது. அக் குகையின் உள்ளே படுக்கை போலப் பல பாறைகள் அமைந்திருத்தலால் அவற்றைப் பஞ்ச பாண்டவர் படுக்கை என்று கருது கின்றனர் பொது மக்கள்.

கரு நிறம் உடைய கண்ணனும் வெண்ணிறம் வாய்ந்த பலராமனும் இருங் குன்றத்தில் ஒருங்கே காட்சி யளித்தனர் என்று பரிபாடல் கூறும். சங்க காலம் என்று சொல்லப் படுகின்ற பழங்காலத்தில் வெள்ளை மூர்த்தியாகிய பலராமனைத் தமிழ் நாடு வழிபட்ட செய்தி சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே குறிக்கப்பட்டுள்ளது. வால்வளை மேனி வாலியோன் கோயில் காவிரிப்பூம்பட்டினத்திலே காட்சி யளித்தது என்று சிலப்பதிகாரம் பாடிற்று. இருங்குன்றம் என்ற மலையிலும் கருமையும் வெண்மையும் கலந்து நின்ற கடவுட் காட்சியை வியந்து பாடினார் இளம் பெருவழுதி.

  • கல்லறை கடலும் கானலும் போலவும்

புல்லிய சொல்லும் பொருளும் போலவும் எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த் தாங்கும் நீள்நிலை ஓங்கு இருங்குன்றம்” என்பது அவர் பாடிய பரிபாடல். ஆயினும் காலப் போக்கில் பலராமன் வழிபாடு அருகிற்று. கண்ணன் வழிபாடு பெருகிற்று. சிலப்பதிகாரமே இதற்குச் சான்று:

வட வேங்கட மலையை நெடியோன் குன்றம்’ என்று

கூறுதல் போன்று, இருங்குன்றத்தைத் திருமால் குன்றம்’ என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது. திருமால் வேங்கட.